School Morning Prayer Activities - 10.07.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2025

School Morning Prayer Activities - 10.07.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2025

திருக்குறள் 

குறள் 94: 

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.  


விளக்க உரை: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.


பழமொழி :

kindness costs nothing.  


நற்குணத்திற்கு செலவு கிடையாது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 


2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


உண்மையான வாழ்க்கை என்பது மற்றவர்களுக்காக வாழ்வதாகும் 



     –புரூஸ்லீ


பொது அறிவு


01.' தமிழ்நாட்டின் கடல் நுழைவாயில்""  எது?


                 தூத்துக்குடி(Tuticorin)


02. இந்தியாவின் வர்த்தக தலைநகரம் எது?


                   மும்பை (Mumbai)


English words :


enchanted – pleased or very interested,மகிழ்ச்சியுற்ற, கவரப்பட்ட


Grammar Tips: 


Raj's and simran's house 


Joint possession 


When two nouns are closely connected and show joint ownership 

Apostrophe+ s 's is added only to the second noun 


Raj and simran's house


Separate possession 


When two  or more nouns imply separate ownership each noun must take its own apostrophe+s 


Raj's and simran's house 


அறிவியல் களஞ்சியம் :


இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.  


ஜூலை 10


சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்


சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.


நீதிக்கதை


 பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு


தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.


“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.


இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.


மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.


மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.


பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.


இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.


அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.


இன்றைய செய்திகள் - 10.07.2025


⭐20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


⭐ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு 

முறை நடைமுறைக்கு வரும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி


⭐அடுத்த 5 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூல் குடிநீர் இல்லாத முதல் பெரிய நகரமாக மாறக்கூடும் என மெர்சி கார்ப்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.


⭐பி.எட். மாணவர்கள் சேர்க்கை: இணையதள விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு.


🏀விளையாட்டுச் செய்திகள்


🏀இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.


Today's Headlines


✏Tamilnadu Chief Minister M.K. Stalin  has announced 20 lakhs of  students to be provided laptops soon.


✏US President Trump confirms that  announced    New tax system will come into effect from August 1st.


✏Mercy Corps has warned that Kabul, the capital of Afghanistan, could become the first major city to run out of drinking water in the next 5 years. 


✏ B.Ed. Admissions: Deadline for online application registration extended.



 SPORTS NEWS 


🏀The Indian cricket team has gone to England to participate in a 5-match Test series. England won the first Test and India won the second Test. As a result, the series is tied 1-1.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி