பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2025

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்..
 வருமாறு..

 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு     மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்..

 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் உடனடியாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..

 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..


 பதிவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் பணி ஓய்வு பெற 5 ஆண்டு உள்ளவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை

* 5 ஆண்டுக்கு மேல் உள்ளவர்கள், 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் .

*பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம். மேற்காண் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது

*ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளி வழக்குகள் தலைமை நீதிபதி முடிவெடுக்க  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முழுமையான தீர்ப்பு வரும் வரை பொறுமை காப்போம்

13 comments:

  1. ஆசிரியர்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதி இழைக்கப்
    படுகின்றன. ஏற்கனவே பல ஆயிரம் ஆசிரியர்கள் பதவி உயர்வுகளுக்காக காத்திருக்க
    கும் நேரத்தில் இது போன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கின்றன. பல ஆண்டுகள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையற்றது.தீர்ப்பில் விளக்கு தேவை 10 ஆண்டுகளாக பணி முடித்தவர்களுக்கு.

    ReplyDelete
  2. நிச்சயமாக 10 ஆண்டு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு தேவை. ஆசிரியர்களுக்கான சங்கங்கள் தமிழக அரசிடம் எடுத்துக் கூற வேண்டும். நீதிபதிகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. தமிழக அரசு கொள்கை முடிவு ஒன்றே தீர்வு... மாநில அரசு கள் கொள்கை முடிவு எடுத்தால் நீதிமன்றம் தலையிட முடியாது.... இவ்வளவு பிரச்சினை க்கு காரணமே நிர்வாக திறனற்ற அரசுதான்... ஆக உச்சநீதிமன்றம் அனைத்து MLA MP தகுதி தேர்வு வைத்து தேர்ச்சி பெற வேண்டும் என தீர்ப்பளிக்க வும்.... வழக்கறிஞர் களுக்கு தகுதி தேர்வு ஒன்றை வைத்து தேர்ச்சி பெற்றால்தான் வழக்காட முடியும் என கூற தயாரா உச்சநீதிமன்றம்

    ReplyDelete
    Replies
    1. நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு மற்றும் வழக்கறிஞர்கள் to நீதிபதிகள் நியமணம் பெற கட்டாய தகுதி தேர்வு கட்டாயம் தேவை . அனைத்து டோல் கேட்டில் அலுவலகத்தை தவிர இதர நேரங்களுக்கு 10 மடங்கு கட்டணம் வசூலிக்கலாம் சம்பளத்தை பொறுத்து.

      Delete
  4. இப்போ இப்படி கொதிக்கும் நீங்கள் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு மேலும் ஒரு நியமனத் தேர்வு என்று அரசு கூறிய போது நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்... உங்களுக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா????

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் சங்கங்கள் நியமன தேர்வு வேண்டாம் என்று தான் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் தோழரே. அரசு தான் இப்படி செய்கின்றன

      Delete
  5. கேவலம் ஒரு 82 மதிப்பெண் எடுக்க இப்படி நடுங்குகிறீர்கள்???? நீங்கள் எல்லாம் என்ன ஆசிரியர்களோ????

    ReplyDelete
    Replies
    1. கேவலம் எல்லாம் இல்லை. 50 மதிப்பெண் எடுக்க விடாமல் செய்ய முடியும். இந்த ஆண்டு TNPSC கேள்வித்தாள் போல . இது சாதாரணம்

      Delete
    2. நல்ல தீர்ப்பு வரவேற்கிறோம் தங்களின் ௮றிவை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்

      Delete
  6. Very good and great judgement for quality of education.

    ReplyDelete
  7. Very good and great judgement for quality of education.

    ReplyDelete
  8. still supreme court has given a hole for minority schools, why shoud not they impose tet for all teachers, minority schools dont have enough tet qualified??

    ReplyDelete
  9. மூத்த ஆசிரியர்கள் இந்த தீர்ப்பில் ஏதேனும் ஓட்டை இருக்கிறதா என்று ஆராய்ச்சியை மேற்க்கொள்வார்களே தவிர புத்தகத்தை எடுத்து படித்து 82 மதிப்பெண்கள் எடுக்கலாம் என்று கடுகளவும் நினைக்க மாட்டார்கள்.... ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இனி பண மழை தான்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி