பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2025

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு

 

தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பின் 238-வது மத்​திய அறங்​காவலர்​கள் குழு கூட்​டம் மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.


இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறை​களை எளி​தாக்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. அதன்​படி, மருத்​துவம், கல்​வி, திரு​மணம், வீடு மற்​றும் சிறப்பு சூழ்​நிலைகள் என அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​கள் பிஎப் பணத்​தில் 100 சதவீதத்​தை​யும் திரும்ப பெறலாம். இது 7 கோடிக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் தங்​கள் ஓய்​வூ​தி​யத்​தைப் பாது​காப்​ப​தோடு, தங்​கள் சேமிப்பை எளி​தாக அணுக​வும் முடி​யும்.


முன்​ன​தாக பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்கு 13 வகை​யான விதி​முறை​களை வைத்​திருந்​தது. தற்​போது அவை எல்​லாம் ஒருங்​கிணைக்​கப்​பட்டு ஒரே ஒரு பிரி​வின் கீழ் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறையை அறி​வித்​துள்​ளது. இது தொழிலா​ளர்​கள் எளி​தாக புரிந்து கொள்​ள​வும், பணத்தை எளி​தாக திரும்பப் பெற​வும் வழி​வகுக்​கும். திரு​மணம், கல்வி செல​வுக்கு 3 முறை மட்​டுமே பிஎப் சேமிப்​பில் இருந்து பணத்தைப் பெற முடி​யும். தற்​போது, கல்விக்கு 10 முறை வரை​யிலும், திரு​மணத்​துக்கு 5 முறை வரை​யிலும் பணம் எடுக்க முடி​யும்.


இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​களு​டைய சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து தகு​திக்​கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடி​யும். மேலும், பிஎப் சேமிப்​பில் இருந்து சிறிதளவு பணம் எடுப்​ப​தற்​கான குறைந்​த​பட்ச பணிக் காலம் 12 மாதங்​களாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், சிறப்பு சூழ்​நிலைகளின் கீழ் பணத்தை திரும்பப் பெற, காரணங்​களை தெரிவிக்க வேண்​டிய​தில்​லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி