மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக ( Online ) 23.10.2025 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.மு.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது . அக்கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப்பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் நிலைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது . பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பாக 08.10.2025 அன்று ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தொடர் போராட்ட இயக்க நடவடிக்கைகள் முடிவெடுக்கப்பட்டது . ஆயினும் இயற்கை சீற்றத்தின் காரணத்தால் நாம் எடுத்துள்ள கீழ்கண்ட முடிவுகளை தொய்வின்றி , வெற்றிகரமாக நடத்திட அனைத்து அமைப்புகளும் தங்களது மாநில மையத்தின் சார்பாக அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப்பணியாளர்களிடம் கொண்டு சென்று மிக எழுச்சியோடு பங்கேற்க வைப்பது என முடிவெடுக்கப்பட்டது .
23.10.2025 JACTTO GEO கூட்ட முடிவுகள் pdf - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி