உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2025

உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு

பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசு உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் பணிபுரி​யும் உடற்​கல்வி ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு மூல​மாக, உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 நியமனம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.


அதன்​படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நில​வரப்​படி, உடற்​கல்வி ஆசிரியர் பணி​யில் இருந்து உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகு​தி​யானவர்​களின் பெயர்ப் பட்​டியலை தயார்​ செய்து அனுப்ப வேண்​டும்.


அந்த வகை​யில், இந்த பட்​டியலில் இளநிலை​யில் இரட்டை பட்​டப் படிப்பு படித்​தவர்​களின் பெயரை சேர்க்​கக் கூடாது. பட்​டியலில் இடம் பெற்​றுள்ள ஆசிரியர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் இருக்​கிறதா என்​பதை கூர்ந்​தாய்வு செய்ய வேண்​டும்.


விதி​முறை​களுக்கு முரணாக பெயர் சேர்க்க பரிந்​துரைத்​தாலோ அல்​லது பெயர் விடு​பட்​ட​தாக தெரி​வித்து முறை​யீடு ஏதும் பின்​னர் பெறப்​பட்​டாலோ அதற்கு சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் முழுப் பொறுப்பை ஏற்க நேரிடும். எனவே, இந்த விவ​காரத்​தில் கூடு​தல்​ கவனத்​துடன்​ செயல்​பட வேண்​டும்​. இவ்​​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

3 comments:

  1. BT to PG promotion panel கேட்காமல். உடற்கல்வி ஆசிரியருக்கு மட்டும் தனியாக Promotion Panel. கேட்டுள்ளார்கள்..?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வருடா வருடம் கேட்கிறார்கள் இவர்களுக்கு எப்பவாவது கேட்கிறார்கள் இது பொறுக்கவில்லையா

      Delete
    2. Sir, தாராளமாக PET to Physical Director Panel Proceedings futhur.ஆ temporary list. Final list and Councilingனு உங்களுக்காவது. போடட்டும். SIR.BT to PG Last 3 years ஆ List கேட்டு வாங்கி வச்சுருவாங்க. 01-01-25 ன் படி அதுகூட கேட்கலைன் தான் சொல்ல வந்தது.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி