தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2025

தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு.

 

தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் 2025 மதிப்பெண்களை பார்க்க

👇👇👇👇

Click here Results 


பள்ளி மாணவ , மாணவியர்கள் அறிவியல் , கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்ற தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் " தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு " நடத்தப்பட்டு வருகிறது . 2025-2026 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11 : 10.2025 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / -வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள் . தமிழ்நாடு அரசின் 10 - ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்பட்டது . இத்தேர்வினை 2.57,761 மாணவர்கள் எழுதியுள்ளனர் தற்பொழுது இத்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 தேர்வர்களின் பெயர் , முகப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி மற்றும் பள்ளியின் நிர்வாக ( அரசுப் பள்ளி அரசு உதவிப்பெறும் பள்ளி தனியார் பள்ளி ) வகையில் திருத்தங்கள் இருப்பின் 20.11.2025 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக dgedsection@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாகவும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி