School Morning Prayer Activities - 17.10.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2025

School Morning Prayer Activities - 17.10.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.2025

திருக்குறள் 

குறள் 983: 


அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ 

டைந்துசால் பூன்றிய தூண் 


உரை


அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.


பழமொழி :

success blooms in the soil of consistency. 


தொடர்ச்சியில் தான் வெற்றியின் மலர் மலர்கிறது.


இரண்டொழுக்க பண்புகள் :


1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்


2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :


அறியாத காலத்தில் வெறும் நம்பிக்கையுடன் செய்வது பக்தி . அறிவு பெற்ற பிறகு செய்வது மெய்யறிவு - ஷேக்ஸ்பியர்


பொது அறிவு : 


01.தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமான ஆறு எது?


கோதாவரி - Godavari


02. இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?


எம்.எஸ்.சுவாமிநாதன்

M. S. Swaminathan


English words :


Attribute- quality


Author- writer


தமிழ் இலக்கணம்:  


 உரிச்சொல் என்பது ஒரு சொல்லின் பண்புகளை அல்லது தன்மைகளை விளக்கி, பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களுக்கு அடையாக வரும் சொல் ஆகும்.


எ. கா:


நல்ல' மாணவன், 'உயரமான' பெண், 'கடி' மலர், 'சால' தின்றான், மஞ்சள் மாம்பழம்


அறிவியல் களஞ்சியம் :


 இந்த உணர்ச்சி கிறுகிறுப்பு (Vertigo) எனவும் அழைக்கப்படும். உயரத்திலிருந்து கொண்டு கீழே பார்ப்பவனுக்கும், கப்பலில் போகின்ற போது பார்ப்பவனுக்கும் இக்கிறுகிறுப்பு ஏற்படக்கூடும். உட்காதின் நெகிழ் நீர்மத்தின் காரணத்தால் ஏற்பட்ட நரம்பின் விளைவே இது அல்லாமல் பெரும்பாலும் உடல் சார்ந்த தன்மை இதில் இல்லை எனக் கூறலாம். உடலின் எட்டாவது கபால நரம்பின் ஒரு கிளையான வெஸ்டிபுல நரம்பின் பாதிப்பிலும் தலைசுற்றல் ஏற்படும்.


அக்டோபர் 17


உலக வறுமை ஒழிப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.


உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.


நீதிக்கதை


தவளையும் சுண்டெலியும்


அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.


ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா? என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கயிற்றினால் கட்டிக்கொண்டது. 


அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.


அந்த சமயம், தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது. இரண்டு விருந்து கிடைத்த சந்தோஷத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது. 


நீதி : நமக்கு தகுதியானவரை நண்பனாக ஏற்றுக் கொள்ளவதே சிறந்தது. 


இன்றைய செய்திகள் - 17.10.2025


💫இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.  நிலநடுக்கம் 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது- அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தகவல்.


💫 சாலையோரங்கள், சாலை சென்டர் மீடியன் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் தற்காலிக கொடிக் கம்பங்களுக்கு தலா ரூ.1,000 வசூலிக்க தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!


💫 வடகிழக்கு பருவ மழை: மீட்பு பணிக்காக தீயணைப்பு படையினர் ஒத்திகை.


💫 தீபாவளிக்கு சொந்த ஊர் போக  கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை - மதுரை இடையே 4 மெமு சிறப்பு ரயில்கள், தாம்பரம் - செங்கோட்டை இடையே 2 சிறப்பு விரைவு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.


🏀 விளையாட்டுச் செய்திகள்


💫 தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு


💫 ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்றநீர் இந்தியாவின் அபிஷேக் மற்றும் மந்தனா.


Today's Headlines: 


⭐A powerful earthquake has struck Indonesia's Papua province today. It was recorded at 6.7 on the Richter scale. The earthquake was centered at a depth of 70 km, reported by the US Geological Survey.


⭐Madras High Court directs Tamil Nadu government to collect Rs. 1,000 each for temporary flagpoles on roadsides, road center medians, and public places obstructing public view.


⭐Northeast Monsoon: Firefighters rehearse for rescue operations.


⭐Additional special trains announced for Diwali to go home. Southern Railway has announced 4 MEMU special trains between Chennai and Madurai and 2 special express trains between Tambaram and Sengottai.


 *SPORTS NEWS* 


🏀 Isari Ganesh re-elected as president of Tamil Nadu Olympic Association 


🏀  India's Abhishek and Mandhana win ICC's September award.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி