School Morning Prayer Activities - 25.10.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2025

School Morning Prayer Activities - 25.10.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2025

திருக்குறள் 

குறள் 137: 


ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் 

எய்துவ ரெய்தாப் பழி. 


உரை


ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.


பழமொழி :

Life rewards those who never quit. 


ஒரு போதும் கை விடாதவர்களுக்கு வாழ்க்கை பெரிய வெகுமதியை தருகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :


1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.


2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்


பொன்மொழி :


தூய்மையான உள்ளத்தில் உண்மையான அழகு உள்ளது - மகாத்மா காந்தி


பொது அறிவு : 


01.இயந்திரத்தின் எஞ்சினை குளிர்விக்கும் கருவியின் பெயர் என்ன?


ரேடியேட்டர் - Radiator


02. நமது உடலில் பிட்யூட்டரி சுரப்பி எங்குள்ளது?


மூளையின் அடிப்பகுதியில்

At the base of the brain


English words :


different -diverse


dine-feast


தமிழ் இலக்கணம்: 


 பண்புப்பெயர் (அல்லது குணப்பெயர்): ஒருவரின் குணத்தை அல்லது பண்பைக் குறிப்பது 

எ.கா. அழகு, மாட்சி, நேர்மை.

தொழிற்பெயர்: ஒரு தொழிலைக் குறிப்பது.

எ. கா –தச்சர், ஆசிரியர், மருத்துவர்


அறிவியல் களஞ்சியம் :


 நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.


அக்டோபர் 25


பிகாசோ அவர்களின் பிறந்தநாள்


பிகாசோ, 1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் ஸ்பெயின் நாட்டில் உள்ள மால்கா என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, ஜோச் ரூயிசு பால்சுகா. தாய், மரியா பிகாசோ. தந்தை ஓவிய ஆசிரியர். தன்னுடைய தாய் பெயரையே பிரதானப் பெயராக வைத்துக்கொண்டார். ஓவியத்துக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பிகாசோ, ஓவியம் வரைவதே தனி ஸ்டைல் என்றுதான் சொல்ல வேண்டும்.சிந்திக்கும் இடைவெளிகூட இல்லாமல் வேகமாக வரைவதில் பிகாசோவுக்கு இணை பிகாசோவே. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட 13,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். பிகாசோவின் மற்றொரு பிரபலமான ஓவியம், அவர் வரைந்த ஒற்றைப் புறா. இதுதான் உலக அமைதிக்கான சின்னமாக இன்றும் பறந்துகொண்டிருக்கிறது. ``ஓவியன், இருப்பதைப் பார்த்து அப்படியே வரைந்துவிட்டுப்போவதில் என்ன புதுமையான விஷயம் இருக்கிறது? பார்க்கும் காட்சி அவன் மனதினுள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் ஓவியன் ஓவியமாக வரையவேண்டும்” என்று கூறும் பிகாசோ தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் சமூக, தனிமனித உணர்வுகளை தன்னுடைய இறுதிக்காலம் வரை பிரதிபலித்துக்கொண்டே இருந்தார்.


இன்று (அக்டோபர் 25) இந்த மகத்தான ஓவியனின் பிறந்தநாள்!


நீதிக்கதை


 ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். 


ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். 


குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. 


அதுஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான். 


வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன். 


வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள். 


புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல். 


நீதி :


யார் யாரிடம் எந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என ஆராய்ந்து ஒப்படைக்க வேண்டும்.


இன்றைய செய்திகள் - 25.10.2025


⭐நீலகிரி: ஊசிமலை காட்சி முனைப் பகுதியில் காட்டு யானை ஒன்று குட்டியை ஈன்றது. தொடர்ந்து குட்டியுடன் அதே பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால், ஊசி மலை காட்சி முனைப் பகுதி தற்காலிகமாக மூடல்.


⭐மத்திய பிரதேசத்தின் போபாலில் அசிட்டிலின் வாயுவை வெளியேற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகள் கண் எரிச்சல் & பார்வை குறைபாடு பிரச்சினையோடு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 


⭐பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு: 3 போலீசார் உயிரிழப்பு.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள்- துணை முதலமைச்சர் வாழ்த்து. பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.


Today's Headlines


⭐Nilgiris district Usimalai viewpoint has been temporarily closed as a wild elephant gave birth and continues to camp in the same area with the calf. 


⭐Around 125 children are being treated in hospitals with eye irritation & vision impairment after using an acetylene gas gun in Bhopal, Madhya Pradesh.


⭐Two consecutive bomb blasts in Pakistan. 3 policemen were killed.


 SPORTS NEWS 


🏀 Tamil Nadu players win gold in Kabaddi -  The Deputy Chief Minister congratulates them. The 3rd Asian Youth Games were held in Bahrain. They have brought glory to Tamil Nadu by flying the flag of victory internationally.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி