TNPSC - Departmental Exam - December 2025 - Notification Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2025

TNPSC - Departmental Exam - December 2025 - Notification Published

TNPSC - துறை தேர்வுகள், டிசம்பர் - 2025 அறிவிக்கை

துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்களின் விவரங்களை ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும் . அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக துறைத்தேர்வுக்கான ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவுடன் இணைக்க வேண்டும் . பெயர் , தலைப்பெழுத்து , தகப்பனாரின் பெயர் , பிறந்த தேதி , பணிபுரியும் மாவட்டம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் , முதலில் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் மாற்றம் செய்ய வேண்டும் . அதன் பின்னர் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பிக்க இறுதி நாள் வரை , விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை திருத்த அனுமதிக்கப்படுவர் . இந்நிலையில் , ஏதேனும் ஒரு அல்லது பல தேர்வு குறியீட்டு எண்ணிற்கு விண்ணப்பதாரர் விண்ணப்ப தொகையை செலுத்தியிருந்தால் , அந்த தேர்வு குறியீட்டு எண் அல்லது எண்களை அவர் நீக்கும் பட்சத்தில் , அதற்குரிய தேர்வுக்கட்டணம் திருப்பித்தரமாட்டாது . மேலும் , விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிப்பது யாதெனில் , விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இறுதி நாளிற்கு பின்னர் தேர்வுக் குறியீட்டெண் / தேர்வு மையம் / பெயர் / தந்தை பெயர் / வயது / பிறந்த தேதியில் திருத்தம் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது . எனவே , விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே துறைத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும் . பிற வகைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது . விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அவை நிராகரிக்கப்படும் .

TNPSC - Departmental Exam - December 2025 - Notification - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி