டிசம்பர் 10 முதல் தொழில் கல்வி ஆசிரியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2025

டிசம்பர் 10 முதல் தொழில் கல்வி ஆசிரியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

 

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை தடையின்மை கடிதம் வழங்க வேண்டி தொழில் கல்வி ஆசிரியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்



தமிழக மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழக அரசாணை 306ன் படி அரசு விதிகளைப் பின்பற்றி தொழில் கல்வி ஆசிரியர்கள் ரூ 5400 தர ஊதியம் பெற்று வருகின்றனர். 
தமிழக மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் தர ஊதியம் ரூ 5400 அடிப்படையில் ஓய்வூதியப் பலன்கள் பெற தடையின்மை கடிதம் வழங்க வேண்டி கடந்த ஆறு மாதங்களாக கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை செவி சாய்க்கவில்லை.  அலட்சியம் காட்டி வரும் கல்வித் துறையை கண்டித்து வரும் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வி இயக்குனரகம் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக கடலூர் மாவட்ட 
தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 

தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் வி. முத்துக்குமரன் தெரிவித்தது,
"சுமார் 10 ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியராகவும், 30 ஆண்டுகள் முழு நேர தொழிற்கல்வி ஆசிரியராகவும் பணியாற்றி மே 2025 முதல் பணி நிறைவு பெற்ற, ஓய்வூதியம் பெறத் தகுதி உள்ள எங்களுக்கு ஓய்வு பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும் எந்தவித பணப்பலனும் பெறாமல் காலம் தாழ்த்தி வருவது பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் தந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு அடைந்துள்ளார்கள். கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியமும், ஓய்வூதியப் பணப்பலனும் பெறாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களுக்கு விரைவில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயலாகும். இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு உரிய தெளிவுரையை / தடையின்மை கடிதத்தை கணக்கு அலுவலர் அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்பி, அரசாணை 306ன் படி, தொழில் கல்வி ஆசிரியர்கள் பெற்று வந்த ரூ 5400  தர ஊதியம் அடிப்படையில் ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் படும் " என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி