பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் நானோ சயின்ஸ் டெக்னாலஜி படிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2025

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் நானோ சயின்ஸ் டெக்னாலஜி படிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு

 

பொறி​யியல் மாணவர்​கள் ஆன்​லைனில் நானோ சயின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி படிக்க. அ்ண்ணா பல்​கலைக்​கழகம் சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது.


இது தொடர்​பாக, அண்ணா பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் ஓர் அங்​க​மான அழகப்பா தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் (ஏ.சி.டெக்) செயல்​படும் நானோ அறி​வியல் மற்றும் தொழில்​நுட்​ப மையத்​தில், நானோ ச​யின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி தொடர்​பான குறுகிய கால படிப்பு நவ. 26 முதல் டிச. 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.


ஆன்​லைனில் நடத்​தப்​படும் இந்த படிப்​பில், இளநிலை, முது​நிலை பொறி​யியல் மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள் சேரலாம். இந்த படிப்​பில் நானோ டெக்​னாலஜி தொடர்​பான அடிப்​படை விஷ​யங்​கள், அண்​மைக்​கால தொழில்​நுட்ப வளர்ச்சி மற்​றும் பயன்​பாடு​கள் போன்​றவை குறித்து சொல்​லித் தரப்​படும். இதற்கு பதிவு செய்ய கடைசி நாள் வரும் 18-ம் தேதி ஆகும். கூடு​தல் விவரங்​களை பெற 8098953365 என்ற செல்​போன் எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

1 comment:

  1. erkanave msc nano science and technology padichavan polappe naritu iruku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி