சிறப்புத் தகுதித்தேர்வு குறித்து இன்றைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முன்வைக்கப்பட ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2025

சிறப்புத் தகுதித்தேர்வு குறித்து இன்றைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முன்வைக்கப்பட ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள்.

சிறப்புத் தகுதித்தேர்வு குறித்து இன்றைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முன்வைக்கப்பட  ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள்.


1. தேர்வு மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும்.

2. TET தேர்வு எழுத வேண்டிய நிலையில், பத்தாம் வகுப்பிற்குப் பிறகு SGTT என்ற  ஆசிரியர் படிப்பைப் படித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இணையம் மாற்றியமைக்கப்பட வேண்டும். SGTT படித்தவர்களுக்கு தனியாக +2 சான்று கிடையாது. எனவே அவர்கள் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளது. எனவே இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. 

3. TET Paper 2 விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண் கேட்கப்படுகிறது. TRB இணையம் கோரும் பட்டப்படிப்பின் தேர்வு சதவீதம் இல்லாததால், விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டது. சிறப்புத் தகுதித் தேர்வில் Paper 2 விண்ணப்பிக்கையில் பட்டப்படிப்பின் மதிப்பெண் சதவீதம் கேட்கப்படுவது தவிர்க்கப்பட்டால், விண்ணப்பிப்பது எளிதாக இருக்கும்.

4. +2 சான்று, Degree percentage போன்றவைகளால் வரும் சிக்கல்களைத் தவிர்க்க, EMIS ID மட்டும் கேட்கப்பட்டால், பல சிரமங்கள் தவிர்க்கப்படும்.

5. பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கேற்ப வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி