CPS : குரூப் இன்சூரன்ஸில் பங்களிப்பு ஓய்வூதிய நிதி முதலீடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2025

CPS : குரூப் இன்சூரன்ஸில் பங்களிப்பு ஓய்வூதிய நிதி முதலீடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்​தில் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களின் பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்ட நிதிக்கு அதிக வட்டி பெறும் நோக்​கில் ‘குரூப் இன்​சூரன்​ஸ்’ திட்​டத்​தில் முதலீடு செய்ய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது என்று உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.


அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான புதிய ஓய்​வூ​திய திட்​டத்தை ரத்து செய்​து, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த உத்​தர​விடக் கோரி திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த பிரடெரிக் எங்​கெல்ஸ் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.


அந்த மனு​வில், “தமிழகத்​தில் 1.4.2003-க்கு பிறகு பணி​யில் சேர்ந்த அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்கு புதிய ஓய்​வூ​தி​யத்திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. எனினும், இது​வரை புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்​கான விதி​முறை​கள் வகுக்​கப்​பட​வில்​லை. மத்​திய அரசு 2013-ல் ஓய்​வூ​திய நிதி ஒழுங்​காற்று மேம்​பாட்டு ஆணை​யம் அமைத்​துள்​ளது. ஆனால் தமிழக அரசு இதை பின்​பற்​ற​வில்​லை.


ஓய்​வூ​தி​யத் திட்​டம் தொடர்​பாக ஆய்வு நடத்​திய வல்​லுநர் குழு, அரசிடம் பல்​வேறு பரிந்​துரைகளை அளித்​துள்​ளது. இந்​தப் பரிந்​துரைகளை பின்​பற்​று​வது தொடர்​பாக அரசாணை​யோ, விதி​முறை​களோ வகுக்​கப்​பட​வில்​லை. இனால் ஓய்​வூ​தி​யப் பலன்​களை பெற முடி​யாமல் பலர் தவிக்​கின்​றனர்.


எனவே, புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​துவிட்டு, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த உத்​தர​விட வேண்​டும்” என்று கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழக அரசின் நிலைப்​பாட்டை தெரிவிக்​கு​மாறு உத்​தர​விடப்​பட்​டிருந்​தது.


இந்த வழக்கு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. நிதித் துறைச் செய​லா​ளர் தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.


அதில், பொது வருங்​கால வைப்பு நிதி (ஜிபிஎப்) விதி​களில் திருத்​தம் செய்​து, 27.5.2004-ல் பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை​யிலேயே பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் விதி​முறை​கள் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளன.


வருங்​கால வைப்​புநிதி விகிதம் கரு​வூல ரசீதுகளின் வரு​வாயை​விட அதி​க​மாக இருப்​ப​தால் ஓய்​வூ​தி​யர்​களுக்கு வழங்​கப்​படும் வட்​டி​யில் இடைவெளி உள்​ளது.


இதை ஈடு​கட்ட, பங்​களிப்பு ஓய்​வூ​திய நிதியை இந்​திய காப்​பீட்​டுக் கழகத்​தின் பணப் பலனுடன் கூடிய புதிய குழு (குரூப் இன்​சூரன்​ஸ்) ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் முதலீடு செய்ய அரசு நிர்​வாகம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தேக்க நிலை இருப்​ப​தாக மனு​தா​ரர் தெரிவிக்​கும் குற்​றச்​சாட்​டில் உண்​மை​யில்​லை.


கடந்த அக்​டோபர் மாதம் வரை பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் பணம் கேட்டு 54,000 விண்​ணப்​பங்​கள் வரப்​பெற்​றன. இவற்​றில் 51,000 மனுக்​களுக்கு தீர்வு காணப்​பட்​டுள்​ளது.


எனவே, மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. மேலும், இவ்​வழக்கு விசா​ரணை​யில் அரசு தலைமை வழக்​கறிஞர் ஆஜராக காலஅவ​காசம் கோரப்​பட்​டது. இதையடுத்து விசா​ரணையை டிச. 4-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி