PG TRB - முதுநிலை ஆசிரியராக தேர்வு எழுதிய 85,000 பேர் தமிழில் 'பெயில்!' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2025

PG TRB - முதுநிலை ஆசிரியராக தேர்வு எழுதிய 85,000 பேர் தமிழில் 'பெயில்!'

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு எழுதிய 85,000 பேர் ... 

தாய்மொழியே தெரியாமல் ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த அவலம்...


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதியவர்களில், 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். அவர்களின் தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் ஆகிய பணியிடங்களுக்கு, 1,996 பேரை தேர்வு செய்ய கடந்த அக். 12ல் தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.36 லட்சம் பேர் எழுதினர். முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர்.


தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் தேர்வில் மொத்தம் 50 மதிப்பெண் உண்டு. அதில் 20 மதிப்பெண் எடுத்தால் பாஸ் ஆகலாம். பாஸ் ஆனால் தான், பாடம் சார்ந்த விடைத்தாளை மதிப்பீடு செய்வார்கள்.


இத்தேர்வில், 85,000 பேருக்கு மேல், அதாவது 36 சதவீதம் பேர் 20 மார்க் கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளனர். பிரதான பாடம் சார்ந்த தேர்வை இவர்கள் சிறப்பாக எழுதியிருந்தாலும், தமிழில் தோற்றதால் அந்த விடைத்தாள்கள் திருத்தப்படாது. அதனால், இவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


இந்த தேர்வை எழுதியவர்கள் இளநிலை, முதுநிலை, கல்வியியல் என குறைந்தது மூன்று பட்டங்களை பெற்றவர்கள். அதற்கு மேல் எம்.பில்., பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.


இதில் கட்டாய தமிழ் பாட தேர்வின் கேள்விகள், 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் இருக்கும். அதிலும் 40 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் பெயில் ஆகியிருப்பது, கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்கள் கூறியதாவது:


தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்து படிக்காமல், பள்ளி படிப்பை முடிக்கும் நிலை உள்ளது. தமிழை இரண்டாம் பாடமாக எடுத்தால்கூட, பல தனியார் பள்ளிகளில், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


இதனால் தான், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலமே வீணாகியுள்ளது.


முனைவர் என்கிற டாக்டர் பட்டம் பெற்றவர்களும், ஐந்து பட்டங்களை பெற்றவர்களும் கூட, தாய்மொழியான தமிழில் 20 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது பெரும் அவமானம். நமது கல்வி முறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து உணரலாம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

5 comments:

  1. Kelvi kena punda thanama ketta epdi pass agurathu, 10th la evan book author, evan epo prize vangunan , evan epo porandhan, appadinu kelvi keta epdi pass pannurathu

    ReplyDelete
    Replies
    1. Why bad words? R u really trb aspirants . Or someone outside messages. Kindly erase it admin sir.

      Delete
  2. தமிழ் தெரியாமால் தேர்வில் தோல்வி அடையவில்லை தேர்வர்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் தகுதி தேர்வு என்று கூறி விட்டு TNPSC தரத்தில் மனப்பாடம் செய்யும் மிகவும் அகவற்பா, நெஞ்சி மலர், புதினம், இல் நுழை கதிரின் ( பொருள்) மேலும் அனைத்து கேள்விகளும் TNPSC ல் கூட நிறைய கேள்விகள் எளிதாக இருக்கும். இங்கு கேட்கப்பட்ட 30 வினாக்களில் சில வினாக்களை தவிர அனைத்தும் கடினம். தோல்வியடைய செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு கடினமாக கேட்கப்பட்டதால் தான் தோல்வி . தமிழ் degree படித்தவர்கள் மற்றும TNPSC தேர்வுக்கு முன்பிருந்து தயாரானார்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியது ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழ் தகுதி தேர்வு , மற்ற பாட ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி பெறும் வகையில் அடிப்படை தமிழ் புரிதல் மற்றும் எளிமையான வகையில் இருக்க வேண்டுமே தவிர . TNPSC அளவில் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் மாணவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்து தமிழக மாணவர்கள் 80000 மேற்பட்ட மாணவர்களின் ஆசிரியர் கனவை சிதைத்தது. தமிழ் கட்டாய தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் தாங்கள் எழுதிய பாடத் தாயையே திருத்தவில்லை.இது ஒரு அநீதியான செயல். Trb மற்றும் தமிழக அரசு அடுத்த ஆண்டாவது தமிழு தகுதி தேர்வு போல கேள்வி கேட்கப்பட்ட வேண்டும்

    ReplyDelete
  3. Sir pg vacant increase aghuma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி