PG TRB - LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION AND FINAL ANSWER KEY PUBLISHED - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2025

PG TRB - LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION AND FINAL ANSWER KEY PUBLISHED


2025 ஆம் ஆண்டிற்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை -1 1996 காலிப் பணியிடங்கள் நேரடி நியமன அறிவிக்கை ( Notification ) எண் .02.2025 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 10.07.2025 அன்று வெளியிடப்பட்டது . அறிவிக்கையின்படி 12.10.2025 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது . இதனைத் தொடர்ந்து அறிவிக்கையின்படி இறுதி விடைக்குறிப்பு , தேர்வு முடிவுகள் மற்றும் 1 : 1.25 விகிதாச்சாரப்படி மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் , சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும் பணிநாடுநர்களுக்கான வழிமுறைகள் , ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது . அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி ஆகியவை சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து ( i ) அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களுடன் ( ii ) அதனுடைய Self Attested Copies , ( iii ) ஆளறிச் சான்றிதழ் , ( iv ) சுயவிவரப் படிவம் மற்றும் ( v ) Candidate Declaration ஆகியவற்றினை இரு நகல்களில் ( Two Copies ) சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் , அடுத்தக்கட்ட பணித் தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் தொடர்பான கோரிக்கைகளை trbgrievances@tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய மின்னஞ்சல் முகவரிக்கு பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது . கோரிக்கை மனுக்கள் பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது .

PG TRB - LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION AND FINAL ANSWER KEY - Download here

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி