திருக்குறள்
குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.
உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
பழமொழி :
As you sow, so shall you reap.
விதைத்ததைப்போல் பயன் பெறுவாய்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கோபம் என் அறிவை மறைக்கும்.
2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.
பொன்மொழி :
யார் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நீ உன் அழகான வாழ்க்கையை இழந்து கொண்டு இருக்கிறாய் - கௌதம புத்தர்
பொது அறிவு :
01. உலக குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
நவம்பர் 20 - November 20
02.ஜவஹர்லால் நேருவின் சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன?
ஒரு சுயசரிதை (அ) சுதந்திரத்தை நோக்கி
(An Autobiography or Forward to Freedom)
English words :
stalked-pursued quietly and secretly
bowled -crying loudly
தமிழ் இலக்கணம்:
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.
சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்புபாம்பு.
அறிவியல் களஞ்சியம் :
உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் ஈடுபடும் செல்களின் மரபணுக்களில் ஏற்படும் ஒரு திடீர் மாற்றம் (mutation) காரணமாக நுண்ணுயிரால் தாக்கப்பட்டதை அறியும் திறனை உடல் இழக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படாமல் உடல் நோய்வாய்ப்படுகிறது. சின்னம்மை (chicken pox) நோயால் தாக்கப்பட்டவர்கள் இந்த மரபணுமாற்ற பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் பொழுது, நோய் எதிர்ப்பின்றி உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது; ஒருசிலர் மட்டும் ஏன் மற்றவர்களை விட தொற்றுநோய்களால் மிக எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
நவம்பர் 14
ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார்.
நீதிக்கதை
அற்புதமான சிற்பி
ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா? அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.
அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார்.
தேவையற்ற சிந்தனைகளை நீக்கினால், பிறர் போற்றும்படியான வாழ்வை பெற முடியும்.
இன்றைய செய்திகள் - 14.11.2025
⭐மகளிர் உரிமைத்தொகைக்கும் தகுதியானவர்கள் இடம்பெற உதவ வேண்டும்- நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
⭐ரூ.40 கோடி செலவில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்.
⭐அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை: 16-ந்தேதி முதல் கடலோர பகுதிகளில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும்.அந்த வகையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
Today's Headlines
⭐ Chief Minister M.K. Stalin has instructions for administrators. Women's rights should also be ensured for deserving candidates.
⭐ Chief Minister M.K. Stalin inspects mobile ambulances under the Cancer Prevention and Care Program and the Mobile ambulance facility, a project costing Rs. 40 crores.
⭐ Successive low-pressure formation, chance of continuous rain from 16th November in coastal regions.
SPORTS NEWS
🏀The 13th Women's ODI World Cup was won by the champions for the first time. This is the first time in the 52-year history of the World Cup that the Indian team has won the trophy. In that regard, a felicitation ceremony was held for Captain Harmanpreet Kaur at a private school in Chennai.
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி