School Morning Prayer Activities - 24.11.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2025

School Morning Prayer Activities - 24.11.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2025

திருக்குறள் 

குறள் 524: 


சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் 

பெற்றத்தால் பெற்ற பயன் 


விளக்க உரை: 


சுற்றத்தாரால்‌ சுற்றப்படும்படியாக அவர்களைத்‌ தழுவி அன்பாக வாழ்தல்‌ ஒருவன்‌ செல்வத்தைப்‌ பெற்றதனால்‌ பெற்ற பயனாகும்‌.


பழமொழி :

After every fall,rise taller. 


விழுவதுவதெல்லாம் உயரமாக எழுவதற்கே.


இரண்டொழுக்க பண்புகள் :


1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.


2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.


பொன்மொழி :


நல்லதை செய்தால் நல்லவை நடக்கும் .தீயவை செய்தால் தீமையே நடக்கும் அனைவரிடமும் அன்பு செலுத்தினால் உயர்நிலை கிடைக்கும். - புத்தர்


பொது அறிவு : 


01.மூங்கில் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?


அஸ்ஸாம் மற்றும் 


மத்தியப் பிரதேசம்


Assam  and  Madhyapradesh


02.தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள்.?


ஜனவரி 25 -January 25


English words :


jest-joke


perceptive - having a keen understanding


தமிழ் இலக்கணம்: 


 இன்று ர, ற வேறுபாடு குறித்து அறிவோம் 

1. தூய தமிழ் மொழியில் ர,ற இரண்டும் முதல் எழுத்தாக வராது. 

2. அரங்கன் என்று தான் எழுத வேண்டும் ஆனால் வாசிப்பது ரங்கன் என்று வாசிக்க வேண்டும் 

3. ற் இறுதி எழுத்தாக வார்த்தைகளில் வராது.

4. ற் அருகில் மெய்யெழுத்துகள் வராது 

எ.கா. கொற்கை, சிற்பி


அறிவியல் களஞ்சியம் :


 மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.


நவம்பர் 24


அருந்ததி ராய்  அவர்களின் பிறந்தநாள்


சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.


இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். 

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்.

மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.

2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.


நீதிக்கதை


 ஒரு மூதாட்டியின் கதை


வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்திவந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டுவாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள். 


ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை எனக் கூற விரும்பினாள். 


கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து. அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில் இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள். 


காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார். அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு எனக் கேட்டார். 


அம்மூதாட்டி அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன் என்று கூறினார். 


அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்? என்றாள் அம்மூதாட்டி. 


ஆமாம்... அறிவிப்பு அட்டையில் என்ன எழுதி இருக்கிறது? இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன் என்றார். 


ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன் என்று கூறினாள். 


அறிவிப்பு அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன் என்று கூறினாள். 


அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை என எழுதிவிடுங்கள் என்றாள். அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது. 


பகலுணவு வழங்குவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது. 


அன்று மதியம் வழிப்போக்கன் ஒருவன் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தான். மூதாட்டியிடம் ஐந்து பணம் கொடுத்துவிட்டு அம்மா, எனக்கு அதிகமான பசியாக இருக்கிறது. எலுமிச்சங்காய் அளவு சோறாவது எனக்குச் சீக்கிரமாகப் போடு என்றான். 


மூதாட்டி நீ கேட்டபடியே எலுமிச்சங்காய் அளவு சோறு போடுகிறேன் என்று கூறினாள். 


ஒரு வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து. எலுமிச்சங்காய் அளவு சாதம் மட்டும் உருட்டி அவன் இலையில் போட்டாள். 


அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்? என்றான். 


நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ! என்று சொன்னாள். 


அப்படியா? எனக்கு இது வேண்டாம். நான் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடு, நான் போகிறேன் என்றான் வழிப்போக்கன். 


உணவு விடுதிக்கு உரியவள் ஐந்து பணத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டாள். 


வழிப்போக்கன் மரியாதை ராமனைத் தேடிச் சென்றான். நீதிபதியான மரியாதை ராமனிடம் நடந்ததைக் கூறி முறையிட்டான். நீதிபதி உணவு விடுதி நடத்தி வந்த மூதாட்டிக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். 


விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன் என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள். 


அதை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நீதிபதி மரியாதை ராமன் புன்னகை தவழ, அம்மா! நீ என்ன ஒப்புக்கொண்டாய்? எலுமிச்சங்காய் அளவு சோறு போடுவதாகத்தானே ஒப்புக்கொண்டாய்? நீ போட்ட இந்த சோற்றுப் பருக்கை ஒன்றே ஒன்றாவது இருக்கிறதா பார்! ஆகவே, வழிப்போக்கன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு! அல்லது எலுமிச்சங்காய் அளவு பருமன் உள்ள ஒரு சோற்றுப் பருக்கையையாவது போடு என்று தீர்ப்பு வழங்கினார். 


சொல்லின் நுணுக்கத்தை உணர்ந்த உணவு விடுதிக்கு உரிமைக்காரியான மூதாட்டி அந்த அளவு பருமனாகும் சோற்றுக்கு உரிய அரிசிக்கு நான் எங்கே போவேன்? என்று கூறி, வழிப்போக்கன் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீதிக்கு அடிபணிந்து நடந்தாள்!


இன்றைய செய்திகள் - 24.11.2025


⭐யமுனை நதி மாசுபாடு - டெல்லி அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி


⭐உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே 20 கிலோ எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் பறிமுதல்


⭐கனமழை எச்சரிக்கை- 4 மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியா, நேபாளத்தை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாத்தியமாக்கியது.


🏀  ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.


Today's Headlines


⭐ Actions taken by Delhi Government to reduce pollution in  Yamuna River is shocking –  Delhi High Court was  dissatisfied.


⭐ 161 gelatin stick explosives weighing 20 kg seized near a government school in Uttarakhand.


⭐Heavy rain warning government declared an important announcement  to the 4 district administrations. very heavy rain is likely to occur in Thoothukudi, Tenkasi, Nellai and Kumari districts.


 *SPORTS NEWS* 


🏀 India has won the first ever Women's T20 World Cup for the visually impaired. This historic victory was made  by India defeating Nepal in the final.


🏀 The Junior World Cup Hockey series to be held in Chennai, from the 28th to the 10th of December.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி