திருக்குறள்
குறள் 491:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
விளக்க உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
பழமொழி :
The fire that burns you,forges you.
உன்னை எரிக்கும் தீ தான் உன்னை உருவாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.
2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.
பொன்மொழி :
ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாக வாழ்வதை விட அரை நிமிடம் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சிறந்தது
Dr. அம்பேத்கர்
பொது அறிவு :
01.உலகிலேயே பருப்பு வகைகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?
இந்தியா - India
02.தமிழ்நாடு சட்டப் பேரவையின் தற்போதைய சபாநாயகர்யார்?
திரு. மு. அப்பாவு-Thiru. M. Appavu
English words :
incessant-constant
Androit-skillful
தமிழ் இலக்கணம்:
1. குறிலைத் தொடர்ந்து இடையின 'ர' கர மெய் வரவே வராது ஆனால் வல்லின 'ற' கரம் வரும்
எ.கா. கர்மம் –தவறு
அர்ச்சனை –தவறு.
கருமம், அருச்சனை என்றே எழுத வேண்டும்
விற்பனை, கற்சிலை, குற்றம், கற்றான்
2. கருப்பு என்பது பஞ்சத்தை குறிக்கும் நிறத்தை அல்ல.
கறுப்பு என்ற வார்த்தையே நிறத்தை குறிக்கும்
அறிவியல் களஞ்சியம் :
ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களை காண முடியும்!
வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.
நவம்பர் 26
இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
சிறுவனின் தன்னம்பிக்கை
ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.
உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.
அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார்.
சிறுவன் சொன்னான். இல்லை, நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன் என்றான்.
இன்றைய செய்திகள் - 26.11.2025
⭐கோவையில் செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
⭐காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி:
டெல்லியில் அரசு, தனியார் அலுவலகங்களில் 50% வீட்டிலிருந்தே வேலை
⭐பள்ளி, கல்லூரிகளில் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு
⭐16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த (டிசம்பர் 10 முதல்) ஆஸ்திரேலியாவில் தடைவிதிக்கப்ப ட்டுள்ளது போல டென்மார்க் & மலேஷியாவும் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்க திட்டமிட்டுள்ளன.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15 ஆம் தேதி மோதும் இந்தியா-பாகிஸ்தான். டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
Today's Headlines
⭐Chief Minister M.K. Stalin inaugurated the Semmozhi Park in Coimbatore.
⭐Increasing air pollution in New Delhi, 50% of government and private offices to proceed with their work from home.
⭐M.K. Stalin ordered to read the preamble of the Constitution in schools and colleges.
⭐Denmark & Malaysia are also planning to ban social media use by those under 16 (as of December 10), similar to Australia's ban on social media use by those under the age of 16.
SPORTS NEWS
🏀T20 World Cup schedule released: India-Pakistan to clash on February 15 .
20 countries are participating in the T20 World Cup.
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி