நிரப்பிக் கொடுத்த SIR படிவத்தின் நிலை என்ன? படிவம் வரவேயில்லையே, ஏன்? என்ன செய்யலாம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2025

நிரப்பிக் கொடுத்த SIR படிவத்தின் நிலை என்ன? படிவம் வரவேயில்லையே, ஏன்? என்ன செய்யலாம்?


நிரப்பிக் கொடுத்த SIR படிவத்தின் நிலை என்ன? படிவம் வரவேயில்லையே, ஏன்? என்ன செய்யலாம்?

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


நிரப்பிக் கொடுத்த SIR படிவம் online மூலம் தேர்தல் ஆணையத்திடம் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை நாமே உறுதி செய்து கொள்ளலாம். அதற்கு,


https://voters.eci.gov.in/login


என்ற தளத்தில் நாம் முன்னதாக Voter IDயுடன் இணைத்துக் கொடுத்த Mobile எண் மூலம்,


* Registered Mobile No.


* Captcha


* Request OTP


என்று வரிசையில் சென்றால், வரும் OTPயை அளித்து,


* Verify & Login


என்பதை அழுத்தவும். அதன்பின் வரும் திரையில், SERVICES என்ற தலைப்பின்கீழ் உள்ள,


* Fill Enumeration Form


என்பதை அழுத்தினால் தோன்றும் திரையில்,


* Select State -> Tamil Nadu


என்பதைத் தேர்வு செய்து,


* Enter EPIC Number in 2025


என்ற கட்டத்தில் தற்போது உள்ள Voter ID எண்ணைக் கொடுத்து,


* Search


பொத்தானை அழுத்தவும்.


நிற்க. இதுவரை நாம் பார்த்தது SIR படிவத்தை நேரில் பெற இயலாதவர்கள் Online நிரப்புவதற்கான வழிமுறை. இதில் சென்றுதான் நாம் எழுதி நிரப்பிக் கொடுத்த படிவம் Onlineல் ஏற்றப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய முடியும்.


நீங்கள் நிரப்பி வழங்கிய படிவத்தை BLO தனது EC App மூலம் தேர்தல் ஆணையத்திடம் Onlineல் சமர்ப்பித்து இருந்தால்,


* Your form has already been submitted with Mobile No. . . . . . .


என்ற செய்தி நீல நிறத்தில் தோன்றும். ஒருவேளை தற்போதுவரை அவர் Onlineல் பதிவேற்றவில்லை எனில், நேரடியாக Onlineல் நிரப்புவதற்கான பக்கம் தோன்றும்.


தாங்கள் முன்னரே படிவத்தைப் பெற்று நிரப்பி BLOவிடம் அளித்துள்ளதால், அதில் மேற்கொண்டு எதுவும் செய்யாது Logout செய்து வெளியேறிவிட்டு, BLOவிடம் Onlineல் பதிவேற்ற நினைவூட்டுங்கள். அது போதும்.


இதுவரை SIR படிவமே தங்களுக்குக் கிடைக்கவில்லை எனில், அந்தப் பக்கத்தில் கேட்கப்படும் விபரங்களை நிரப்பி ஆதார் OTP மூலம் நீங்களே Submit செய்துவிடலாம். 


ஒருவேளை 2025 ஜனவரி சரிபார்ப்பில் குடியிருப்பு மாற்றம் உள்ளிட்டவற்றால் தங்களது பெயர் நீக்கப்பட்டிருந்தால் தற்போது SIR படிவம் வந்திருக்காது. மேலும், மேற்கூறிய இப்பக்கத்தில் Login செய்யவும் முடியாது. எனவே, 09.12.2025 வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. 09.12.25 - 08.01.26 காலகட்டத்தில் Form6 & தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களில் ஒன்றுடன் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். (இது குறித்து பின்னர் பதிவிடுகிறேன்)


'படிவத்த நேர்ல போயீலாம் வாங்க முடியாது; நான் Onlineலயே நிரப்பிக்கிறேனு' இருப்போர் 3 விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.


1. Voter IDயுடன் Mobile எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் Login செய்ய முடியும்.


2. Voter ID & ஆதார் இரண்டிலும் பெயர் எழுத்து & Space மாறாமல் ஒன்றாக இருக்க வேண்டும்.


3. ஆதாருடன் இணைக்கப்பட்ட Mobie எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.


'ஓ. . . இதுக்குப் பேருதான் அ-வா!?' என்பதைப் போல தலைக்குள் பல்பு எரிந்தால், BLOவைத் தேடிப்புடுச்சு படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுத்திடுங்க. கண்டுக்காம கடந்து போயிடாதீங்க.


SIR வாக்குக்கு மட்டுமானதாகத் தோன்றவில்லை; வாழ்க்கைக்கானதாகத் தெரிகிறது. ஆதாரைவிட, நாளையிது அத்தியாவசியமாக மாற்றப்பட வாய்ப்புள்ளதால் அலட்சியம் வேண்டாம் மக்கா!

செல்வ.ரஞ்சித் குமார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி