தமிழகத்தில் 4.24 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதியுள்ள 'டெட்' தேர்வுக்கான ‘கீ ஆன்ஸர்’ டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தி்ன்படி பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதைத்தொடர்நது டெட் தேர்வு கடந்த நவ.15 மற்றும் 16-ம் தேதி நடந்தது.
இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்ஸர்) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வாரிய தலைவர் ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டெட் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வினாக்களுடன் https://trb1.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவை மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்புவோர் டிச.3 மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (standard Text Books) ஆதாரங்கள் மட்டுமே சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். கைடுகள் ஏற்கப்படாது. மேலும், பாடவல்லுநர்கள் முடிவே இறுதியானது. இவ்வாறு கூறியுள்ளார்.
டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டிருப்பதால் விரைவில் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, டெட் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் ஒடிசா உள்ளிட்ட இதர மாநிலங்களில் இருப்பதைப் போல் 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் அமைச்சர் அன்பில் மகேஸிடம் வலியுறுத்தியுள்ளன. இதை ஏற்று தேர்ச்சி மதிப்பெண் குறைக்கும்பட்சத்தில் முதலில் அது தொடர்பான அரசாணை வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியாகும்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் டெட் தேர்ச்சி மதிப்பெண் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதமாகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமாகவும் உள்ளது. ஹரியானாவிலும் ஒடிசாவிலும் அனைத்து பிரிவினருக்கும் 50 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் பொது பிரிவுக்கு 60, பிசி, எம்பிசி, எஸ்சி வகுப்பினருக்கு 55, எஸ்டி (இந்த ஆண்டு மட்டும்) 40 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி