கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2025

கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’

 

கேட் நுழைவுத் தேர்​வில் 12 பேர் நூற்​றுக்கு நூறு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளனர். ஐஐஎம் போன்ற தேசிய அளவி​லான முன்​னணி உயர்​கல்வி நிறு​வனங்​களில் முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர, கேட் (Common Admission Test-CAT) நுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த ஆண்​டுக்​கான கேட் தேர்வு நாடு முழு​வதும் 170 மையங்​களில் கடந்த நவம்​பர் 30-ம் தேதி நடை​பெற்​றது. 2.58 லட்​சம் மாணவர்​கள் பங்​கேற்​றனர். இத்​தேர்வு முடிவு​களை கோழிக்​கோடு ஐஐஎம் நேற்று முன்​தினம் வெளி​யிட்​டது.

அதில், 12 பேர் நூற்​றுக்கு நூறு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளனர். 26 பேர் 99.99 மதிப்​பெண் பெற்​றுள்​ளனர். இந்த ஆண்​டும் தேர்ச்​சி​யில் மாணவர்​கள் ஆதிக்​கம் செலுத்​தி​யுள்​ளனர்.

கேட் தேர்வு முடிவுகளை iimcat.ac.in என்ற இணையதளத்​தில் தெரிந்து கொள்ளலாம். கட்​ஆஃப் மதிப்​பெண் 90-க்கு மேல் நிர்​ண​யிக்​கப்​படும் என்று கூறப்​படு​கிறது. கேட் மதிப்​பெண் மூலம், ஐஐஎம் மட்​டுமின்​றி, 93 இதர உயர்​கல்வி நிறு​வனங்​களி​லும் மேலாண்மை படிப்​பு​களில் சேர​முடி​யும் என்​பது குறிப்பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி