ஜனவரி 25-ல் சிமேட் தேர்வு: என்டிஏ அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2025

ஜனவரி 25-ல் சிமேட் தேர்வு: என்டிஏ அறிவிப்பு

 

நாடு முழு​வதும் உள்ள மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் அகில இந்​திய தொழில்​நுட்​பக் கல்வி குழு​மத்​தின் (ஏஐசிடிஇ) கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் மேலாண்மை படிப்​பு​களில் சேர, பொது நிர்​வாக நுழைவுத் தேர்​வில் (சிமேட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும்.


ஆண்​டு​தோறும் இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) கணினி வழியில் நடத்​துகிறது. இந்த ஆண்டு சிமேட் தேர்​வுக்​கான அறி​விப்​பாணை கடந்த அக்​டோபரில் வெளி​யானது.


அதை தொடர்ந்​து, இணை​யதள விண்​ணப்ப பதிவு அக்​டோபர் 17 முதல் நவம்​பர் 25-ம் தேதி வரை நடை​பெற்​றது. நாடு முழு​வதும் சுமார் 75 ஆயிரம் பேர் வரை விண்​ணப்​பித்​தனர்.


இந்​நிலை​யில், தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, ஜனவரி 25-ம் தேதி சிமேட் தேர்வு நடை​பெற உள்​ளது.


தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட் வெளி​யீடு உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in எனும் இணை​யதளத்​தில் அறியலாம்.


ஏதேனும் சந்​தேகம் இருந்​தால் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்​லது cmat@nta.ac.in மின்​னஞ்​சல் வாயி​லாக தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி