அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2025

அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்

அரை​யாண்​டுத் தேர்வு வினாத்​தாள்​கள் பள்​ளி​களுக்கு நேரடியாக வழங்​கப்​படும் என்று தொடக்​கக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்​வு​கள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.


இதற்​கான வினாத்​தாள் தயாரிப்பு பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்​கான வினாத்​தாளை பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை தொடக்​கக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரை​யான வினாத்​தாள்​களை எமிஸ் தளத்​தில் டிச.3-ம் தேதி வரை மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். அதன்​பின்​னர் பள்ளிகளில் குழந்​தைகளின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்​டும்.


தொடர்ந்து வினாத்​தாள்​களை வகுப்​பு, பாடம், பயிற்​று மொழி வாரி​யாக பிரித்​து, உறை​யிட்ட கவரில் வைத்து தேர்​வுக்கு 2 நாட்​களுக்கு முன்​பாக வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் வாயி​லாக பள்​ளி​களுக்கு அனுப்​பி வைக்க வேண்டும்.


தலைமை ஆசிரியர்​கள் அவற்றை பாது​காப்​பாக வைத்​து, தேர்வு நடை​பெறும் நாளில் வினாத்​தாளை எடுத்து பயன்​படுத்த வேண்​டும். இதே​போல், 6 முதல் 8-ம் வகுப்பு வரை​யான மாணவர்​களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணை​யதளத்​தில் வினாத்​தாள்​கள் பதிவேற்​றம் செய்​யப்​படும்.


தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்​தைய தினம் காலை 9 மணி​யில் இருந்து பள்​ளி​கள் நேரடி​யாக வினாத்​தாள்​களை பதி​விறக்​கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்​கப்​படும். வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி தேர்வை சிறப்​பாக நடத்தி முடிக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி