பள்ளிகளுக்கு 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. இதையடுத்து கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய கொண்டாட்டங்களை தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது. குறிப்பாக தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9,416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 7,898 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பாழடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். புதிய கட்டடம் கட்டப்படுவதால் சமுதாய கூடங்களில் அல்லது வாடகை கட்டிடங்களில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி