அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கங்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2025

அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கங்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (JACTTO-GEO) பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் குழு இன்று (டிசம்பர் 22) பேச்சுவார்த்தை நடத்துகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் சங்கங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, JACTTO-GEO தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் 18-ந் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது; அதைத் தொடர்ந்து டிசம்பர் 13-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இதனிடையே பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, இறுதி அறிக்கை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் கேட்டிருந்தது. இதற்கு ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த பின்னணியில் இன்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாவிட்டால், வரும் டிசம்பர் 27 அன்று வேலைநிறுத்த மாநாட்டை நடத்தி, அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக JACTTO-GEO திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

1 comment:

  1. இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவர்களும் ஏமாற்றுவார்கள் . நீங்களும் ஏமாறுவிர்கள் என்று பார்ப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி