சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கைது - சம வேலைக்கு சம ஊதியம் கோரும் முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2025

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கைது - சம வேலைக்கு சம ஊதியம் கோரும் முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு

 சமவேலைக்கு சமஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்​யப்​பட்​டனர். சாலை​யில் அமர்ந்து போராடிய​தால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. ஆசிரியை ஒரு​வர் மயங்கி விழுந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009-ல் பணி​யில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும் அதற்கு பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கிறது. ஊதிய முரண்​பாட்டை கண்​டித்து சமவேலைக்கு சமஊ​தி​யம் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி நீண்ட கால​மாக போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், டிச.26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் உள்​ளிட்ட கல்​வித்​துறை அலு​வல​கங்​கள் அமைந்​துள்ள டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டம் நடத்​தப்​ போவ​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து வளாகத்​தின் அனைத்து வாயில்​களும் மூடப்​பட்டு போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.


போராட்​டத்​துக்​காக வெளியூர்​களில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்​களை நுங்​கம்​பாக்​கம், எழும்​பூர் ரயில்​நிலை​யங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் வழிமறித்து போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றிச்​சென்​றனர். இந்​நிலை​யில், காலை 11.30 மணி​யள​வில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் மற்​றும் நிர்​வாகி​கள் தலை​மை​யில் 50-க்கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்​றனர்.

மற்​றொரு​புறம் ஏராள​மானோர் குவி​யத்​தொடங்​கினர். அதில் ஒரு பிரி​வினர் சாலை​யில் அமர்ந்து கோஷமிட்​டனர். அவர்​களை போலீ​ஸார் குண்​டுக் கட்​ட​மாக தூக்கி போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றினர்.


திடீர் மறியல்: தொடர்ந்து ஆசிரியர்கள் கூட்​டம் கூட்​ட​மாக வரு​வதும் சாலை​யில் அமர்ந்து கோஷமிடு​வதும், அவர்​களை போலீ​ஸார் வாக​னங்​களில் ஏற்​றிச் செல்​வதும் என கல்​லூரிச்சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. வாக​னங்கள் மாற்​றுப் பாதை​யில் திருப்​பி​விடப்​பப்​பட்​டன. இதற்​கிடையே, போராட்​டத்​தில் ஈடு​பட்ட நாமக்​கல் ஆசிரியை மகேஸ்​வரி என்​பவர் மயங்கி விழுந்​தார். இதையடுத்து அவர் அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார்.


போராட்​டம் தொடரும்: போராட்​டம் சற்று தணிந்த நிலை​யில் 50-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை ஒய்​எம்​சிஏ கல்​லூரி அருகே போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதனால் அவர்​கள் அனை​வரும் சாலை​யில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர் அவர்​கள் போலீஸ் வாக​னத்​தில் ஏற்றி அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர்.

முன்​ன​தாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தி​முக தேர்​தல் வாக்​குறு​தியை இது​வரை நிறைவேற்​ற​வில்​லை, தொடர்ந்து பேச்​சு​வார்த்​தை, குழு அமைப்​பது என தள்​ளிக்​கொண்டு செல்​கிறார்​கள்.

முன்​கூட்​டியே கைதுசெய்​வது, வலுக்​கட்​டாய​மாக அப்​புறப்​படுத்​து​வது என எங்​கள் போராட்​டத்தை ஒடுக்க நினைத்​தா​லும், கோரிக்கை நிறைவேறும் வரை போராடு​வோம். திமுக ஆட்​சி​யில் போராடக்​கூட அனு​மதி மறுக்​கிறார்​கள். அறவழி​யில் போராடும் எங்​களை தீவிர​வா​தி​களைப் போல நடத்​துகிறார்​கள்” என்​றார்.


அரசியல் தலை​வர்​கள் கண்​டனம்: சமவேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக்கோரி போராட்​டத்​தில் ஈடு​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டதற்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றக் கோரி போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்​களை காவல்​துறை​யினர் கைது செய்​திருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது. முதல்​வர் ஸ்டா​லின் தான் கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்ற முடிய​வில்லை எனில், அதனை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்​டும்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சமவேலைக்கு சம ஊதி​யம் கேட்​டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்​களின் மீது அடக்​கு​முறையை ஏவி அவர்​களை வலுக்​கட்​டாய​மாகக் கைது செய்​துள்​ளது கடும் கண்​டனத்​துக்​குரியது.

ஆசிரியர்கள் முதல் செவிலியர்​கள் வரை அனை​வரை​யும் போராடும் அவல நிலைக்கு தள்​ளுவது​தான் நல்​லாட்​சி​யின் அம்​ச​மா? காலி பணி​யிடங்​களை நிரப்​பாமல், பணி​யில் இருப்​பவர்​களுக்கு முறை​யான ஊதி​யம் வழங்​காமல், ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யப் பலன்​களை விடுவிக்​காமல் ஒட்​டுமொத்த அரசு இயந்​திரத்​தையே பழு​தாக்​கியது​தான் திமுக அரசின் நான்​காண்டு சாதனை.

பாமக தலை​வர் அன்​புமணி: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும் என்று போராட்​டம் நடத்​திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்​கு​முறை​களை கட்​ட​விழ்த்து விட்​டிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. ஆசிரியர்​களின் போராட்​டத்தை அடக்​கு​முறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்​ணத்தை திமுக அரசு கைவிட்​டு, அவர்​களின் கோரிக்​கையை உடனே நிறைவேற்ற வேண்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: திமுக அறி​வித்த தேர்தல் வாக்​குறு​தி​களை இடைநிலை ஆசிரியர்​களும் நம்பி வாக்​களித்​தனர். ஆனால் இன்​னும் நிறை வேற்​றப்​ப​டாதது ஏற்​புடையதல்ல. போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்​களை கைது செய்​தது அடக்​கு​முறை​யான செயல். தொடர்ந்து அடக்​கு​முறை​ களைக் கையாளாமல் இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்​கைகளை உடனே நிறைவேற்ற முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறியுள்​ளனர்.


2 comments:

  1. இந்த கோரிக்கை நியாயமான கோரிக்கை உங்களுடைய போராட்டம் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. போராட்டத்திற்கான காரணமே முதல்வர் கொடுத்த வாக்குறுதிதான் இன்னும் பல வாக்குறுதிகள் உள்ளன இன்னும் பல போராட்டங்கள் இருக்கும் என நினைக்கிறேன் அடுத்த தேர்தலுக்கு இன்னும் பல வாக்குறிதிகள் தரப்படும் போராட்டங்களும் தொடரும் இதுதான் எங்கள் அரசியல்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி