தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தகுதிகள், லிங்க் இதோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2025

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தகுதிகள், லிங்க் இதோ

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் அரசு கணினி சான்றிதழ் ஆகிய பிப்ரவரி 2026 தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான (GTE And COA February 2026) அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. புதிய பாடத்தில் கணினி வழியில் மற்றும் பாரம்பரிய முறையிலும் பிப்ரவரி மாதம் இத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை எழுதி சான்றிதழ் பெற விரும்புகிறவர்கள் https://tndtegteonline.in/ என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தொழில்நுப்டத் தேர்வுகள், பிப்ரவரி 2026 (TN GTE 2026)
தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகியவற்றில் அரசு சான்றிதழ் பெற அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் (GTE) நடத்தப்படுகிறது. அரசு கணினி சான்றிதழ் தேர்வாக லுவலக ஆட்டோமேஷனில் கணினி தேர்வு (COA) நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள் தமிழ்நாடு அரசின் தொழில்நுப்டக் கல்வி இயக்குநரத்தின் மூலம் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ்களின் மூலம் அரசு துறைகளில் இருக்கும் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மூலம் நிரப்பப்படும், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


2026-ம் ஆண்டி பிப்ரவரி மாதம் இத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி, முடிவுகள் வெளியீடு மற்றும் சான்றிதழ் வெளியீடு ஆகிய தேதிகளை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி