அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை உடனே பணி நிரவல் செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2025

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை உடனே பணி நிரவல் செய்ய உத்தரவு

அரசு உதவி பெறும் பள்​ளி​களில் உள்ள உபரி ஆசிரியர்​களை உடனடி​யாக பணிநிர​வல் செய்ய தொடக்​கக் கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து மாவட்​டக் கல்வி அதி​காரி​களுக்கு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​ய சுற்​றறிக்கை: அரசு நிதி​யுதவி பெறும் பள்​ளி​களில் நடப்பு (2025-26) கல்வி ஆண்​டில் பணி​யாளர் எண்​ணிக்கை நிர்​ண​யம் செய்​யும் பணி​கள் நடந்து வரு​கின்​றன. அதன்​படி, மாணவர் - ஆசிரியர் விகிதப்​படி கணக்​கிடப்​பட்​டு, அந்​தந்த மாவட்​டக் கல்வி அலு​வலர்​களால் ஒப்​புதல் பெறப்​பட்ட பட்​டியல்​கள் தயார் செய்​யப்​பட்​டுள்​ளன.

தனி​யார் பள்​ளிச் சட்​டம் மற்​றும் விதி​களின்​படி, குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் இந்த பணி​யாளர் நிர்ணய அறிக்​கைகளை பள்ளி நிர்​வாகங்​களுக்கு வழங்க வேண்​டும். தொடர்ந்து பள்​ளி​களில் உபரி பணி​யிடங்​கள் கண்​டறியப்​பட்​டால், உடனே பணிநிர​வல் அல்​லது மாற்​றுப் பணி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஆனால், மாவட்​டக் கல்வி அலு​வலர்​களிடம் இருந்து இது​வரை எந்த அறிக்​கை​யும் பெறப்​பட​வில்​லை.

உபரி ஆசிரியர்​களுக்​கான பணிநிர​வல் அல்​லது மாற்​றுப் பணி ஆணை​களை உடனே வழங்​கி, அதன் விவரங்​களை ஜன.23-க்​குள் இயக்​குநரகத்​துக்கு மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 1,200-க்​கும்மேற்​பட்டோர் உபரி​யாக இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி