ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசு காலஅவகாசம் கேட்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2025

ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசு காலஅவகாசம் கேட்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜர்.*


CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (17.12.2025)விசாரணைக்கு வந்தது.


புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழக அரசின் சார்பில் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கப்பட்டது.


மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன்படி ஊழியரின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு அரசின் பங்களிப்பாக 10%  வழங்கப்பட்டு பணி ஓய்வின் போது ஒட்டுமொத்தத்தமாக வழங்கப்படுகிறது.


ஓய்வூதியத்திற்கான உருவாக்கப்பட்ட PFRDAல்  அனைத்து மாநிலங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஓய்வூதியத் தொகை அதன் பராமரிப்பில் உள்ளது. பல மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் CPS திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பணிக்கொடையும் இல்லை எவ்விதமான விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை.


அரசின் பங்களிப்பாக 14% பல மாநிலங்கள் உயர்த்தி வழங்கி வருகின்றனர்.


1978 ஓய்வூதிய விதிகளின்படி பழைய திட்டத்தில் பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.


தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதும் ஒன்று.


2019 இல் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர் கே. கே. சசிதரன் அமர்வில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அறிக்கை இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை, பழைய திட்டம் ஊழியர்களுக்கு பாதுகாப்பானது என்று கூறினார்.


இதனை அடுத்து அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி 01.04.2003 முதல்  புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. மனுதாரர் 2005 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து உள்ளார். 2012 ஆம் ஆண்டுதான் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அரசாணை எண்கள்: 430,59 ன்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியத்தை வரையறை செய்துள்ளோம் என்றும் நீதியரசர் சிவஞானம் அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மனுதாரர் தமிழில் வினாக்கள் கொடுத்ததால் நாங்களும் தமிழில் பதில் வழங்கியுள்ளோம் என்று கூறி  இது பற்றி தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.


இதனை அடுத்து நீதியரசர்கள் அரசிற்கு கால அவகாசம் வழங்கி 06.01.2026 அன்றைக்கு  வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி