ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்பு. தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2025

ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்பு. தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு.

*திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (04.12.2025)விசாரணைக்கு வந்தது.


 *அப்போது மனுதாரர் சார்பில்  ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவிலேயே ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே என்றும் இதற்கான விதிமுறைகளோ வழிகாட்டுதல்களோ இன்றுவரை உருவாக்கப்படவில்லை.


 *பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக T.S ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்றுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களுக்குக்கூட ஓய்வுக்கு பின்னர் பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை , கடந்த 22 ஆண்டுகளாக PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாமலும், பிடித்தம் செய்யப்பட்ட 90,000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசே வைத்திருப்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும், மனுதாரரின் மருத்துவ செலவிற்கோ, மகனின் திருமணத்திற்கோ பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்புத் தொகையிலிருந்து முன்பணம் பெற முடியாத நிலையில் இருப்பதையும் கூறினார்.


*இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் இவ்வழக்கில் அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ( Advocate General) ஆஜராக இருப்பதால் அவகாசம் தேவை என்று கோரியதையடுத்து  நீதியரசர்கள் 11.12.2025 அன்றைக்கு  பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

6 comments:

  1. இப்பெழுது இருப்பவரும் இனிவரும் முதல்வர்களும் ஒய்வு ஊதியம் தரப்போவதில்லை,முதலில் நீங்கள் கட்டிய பணம் வருமா ?அதுவும் பட்டை பாம்பாக போகிறது

    ReplyDelete
  2. பட்டை நாமம் கிடைக்கும்

    ReplyDelete
  3. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நாம் ஒய்வு பெற்றதும் தற்கொலை செய்வது சாலச்சிறந்தது அரசுக்கும் பணம் மிச்சம்

    ReplyDelete
  4. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நாம் அனைவரும் ஒய்வு பெற்றதும் தற்கொலை செய்து உயிரை விடுவது சாலச்சிறந்தது அரசும் அரசை உள்ளவர்களும் மகிழ்வோடு இருப்பார்கள் இதுதான் உண்மை

    ReplyDelete
  5. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் MLA ,மற்றும் IAS,IPS,மேன்மை தாங்கிய நீதிபதிகளையும் சேர்ந்து மிக்க நன்று அரசுக்கு பணம் நிறைய மிச்சம்

    ReplyDelete
  6. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் உங்கள் தற்கொலை நாளை முடிவு எடுத்து விட்டீர்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி