தமிழ்நாடு அரசாணை எண் 306 ன் படி மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்கள் தர ஊதியம் ரூ 5400 பெற்று வருகின்றனர்.
இது குறித்து மாநில கணக்கு அலுவலர், விளக்கக் கடிதம் (Clarification Letter) கேட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார். கல்வித்துறை செயலாளர் அவர்கள் இக்கடிதத்திற்கு கடந்த ஆறு மாத காலமாக
பதில் தெரிவிக்காமல் இருந்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதனால் மே 2025 முதல் பணி நிறைவு பெற்றவர்கள் ஓய்வூதியப் பலன்களை பெற முடியாமல் கடந்த ஆறு மாத காலமாகஅவதிப்பட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் நலன் கருதி, தர ஊதியம்
தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் RTI மூலம் தகவல் கேட்டு பதிவுத் தபால் அனுப்பப் பட்டுள்ளது.
கல்வித்துறை செயலாளர் விரைந்து விளக்கக் கடிதத்தை மாநில கணக்கு அலுவலருக்கு அனுப்பி வைக்க உரிய வழிகாட்டுதல்களை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - இவண் தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி