TNPSC : குரூப்-4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: தேர்வர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2025

TNPSC : குரூப்-4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: தேர்வர்கள் கோரிக்கை

டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வில் காலிப்​பணி​யிடங்​களை அதி​கரிக்க வேண்​டும் என்று ‘இந்து தமிழ் திசை’ உங்​கள் குரலில் வாசகர்​கள் கோரிக்கை விடுத்​தனர்.


இதுதொடர்​பாக தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த வாசகர்​கள் உங்​கள் குரல் சேவை​யில் கூறிய​தாவது: பொது​வாக ஒவ்​வொரு ஆண்​டும் டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் 10ஆ​யிரம், 12ஆ​யிரம் காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும்.


ஆனால், இந்த ஆண்டு குரூப்-4 தேர்​வில் முதலில் 3,935 காலி​யிடங்​கள் அதி​கரிக்​கப்​பட்டு பின்​னர் கூடு​தலாக 727 இடங்​கள் சேர்க்​கப்​பட்​டு, தற்​போது மொத்த இடங்​கள் 4,662 என்ற அளவில்​தான் உள்​ளது.


இந்த காலி​யிடங்​களுக்கு 13 லட்​சம் பேர் தேர்​வெழு​தினர். இத்​தனை லட்​சம் பேருக்கு இந்த குறைந்த காலி​யிடங்​கள் எப்​படி போது​மான​தாக இருக்​கும். அது​மட்​டுமின்றி இது​வரை இல்​லாத வகை​யில் இந்த ஆண்டு குரூப்-4 தேர்வு மிக​வும் கடின​மாக இருந்​தது.


அரசு துறை​களில் லட்​சக்​கணக்​கான காலிப்​பணி​யிடங்​கள் உள்​ளன. இதனால், ஏற்​கெனவே பணி​யில் இருக்​கும் ஊழியர்​களுக்கு பணிச்​சுமை அதி​கரித்​துள்​ளது. நான்​கு, ஐந்து ஊழியர்​கள் பார்க்​கக்​கூடிய வேலைகளை ஒரே ஊழியர் பார்க்க வேண்​டிய கட்​டாயச்​சூழல் ஏற்​பட்​டுள்​ளது.


பணிச்​சுமையை குறைக்​கு்ம் வகை​யில் அரசு துறை​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்ப வேண்​டும் என்று ஊழியர்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதுதொடர்​பான போராட்​டங்​களும் அவ்​வப்​போது நடத்​தப்​படு​கின்​றன.


படித்து முடித்​து​விட்டு லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் வேலை​வாய்ப்​பின்றி இருக்​கிறார்​கள். எனவே, தற்​போது நடத்​தப்​பட்​டுள்ள குரூப்-4 தேர்​வில் காலிப்​பணி​யிடங்​களை கணிச​மான அளவு அதி​கரிக்க வேண்​டும்.


காலி​யிடங்​களை 10 ஆயிரம் அளவுக்கு அதி​கரித்​தால் கட் ஆஃப் மதிப்​பெண்​ணில் விளிம்பு நிலை​யில் உள்ள 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தேர்​வர்​கள் பயன்​பெறு​வர். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.


இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “குரூப்-4 தேர்வை பொருத்​த வரை​யில், பல்​வேறு அரசு துறை​களிட​மிருந்து காலிப்​பணி​யிடங்​கள் வந்​து​கொண்​டிருக்​கின்​றன.


சான்​றிதழ் சரி​பார்ப்பு பணி​கள் நடை​பெறு​வது வரை​யிலும் புதிய காலிப்​பணி​யிடங்​களை சேர்க்​கலாம். அந்த வகை​யில், குரூப்-4 தேர்​வில் காலிப்​பணி​யிடங்​களின் இடங்​கள் எண்​ணிக்கை இன்​னும் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது” என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி