UGC NET 2025 அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? நேரடி லிங்க் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2025

UGC NET 2025 அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? நேரடி லிங்க்

டிசம்பர் 31-ம் தேதிக்கான யுஜிசி நெட் அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொத்தம் 85 பாடங்களுக்கு யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல் கட்டமாக டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. இதர தேர்வுகளுக்கு அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யுஜிசி நெட் டிசம்பர் 2025 அட்மிட் கார்டு பதிவிறக்கம்?

படி 1 : https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.
படி 2 : முகப்பு பக்கத்தில் Admit Card என Latest News பகுதியில் இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
படி 3 : அதில் விண்ணப்ப எண், பாஸ்வோர்டு மற்றும் பாதுகாப்பு எண் ஆகியவற்றை உள்ளிட்டு லாங்கின் செய்யவும்.
படி 4 : தொடர்ந்து, உங்களில் அட்மிட் கார்டு திறையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படி 5 : மேலும், அட்மிட் கார்டில் இடம்பெற்றுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.

அட்மிட் கார்டில் என்னென்ன இடம்பெறும்?
அட்மிட் கார்டில் தேர்வர்களின் விவரங்களுடன், பதிவு எண், தேர்வின் பாடம், நாள், நேரம் மற்றும் இடம் இடம்பெற்று இருக்கும். அட்மிட் கார்டில் உள்ளப்படி தேர்வர்கள் நேரத்தை முறையான கடைபிடிக்க வேண்டும். தேர்விற்கு செல்லும் நபர்கள், கட்டாயம் அசல் அடையாள அட்டை எடுத்துசெல்ல வேண்டும். ஆதார் இருப்பவர்கள், அசல் ஆதார் அட்டையை கொண்டு செல்லவும். ஆதார் இல்லாதவர்கள் முன்னரே சென்று, அதற்கான உரிய ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். கூடுதலாக தேர்வர்கள் விண்ணப்பத்தில் அளித்த 2 புகைப்படங்களை எடுத்துசெல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தால் கொண்டு செல்ல வேண்டும்.









No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி