அரசு ஊழியர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஜன.2-ல் பேச்சுவார்த்தை; எட்டப்படுமா சுமூக முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2026

அரசு ஊழியர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஜன.2-ல் பேச்சுவார்த்தை; எட்டப்படுமா சுமூக முடிவு?

அரசு ஊழியர்களை சமாதானப்படுத்தும் வகையில் நாளை ஜன.,2ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களுடன் அமைச்சர் எ.வ. வேலு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காலை 11 மணிக்கு போட்டோ ஜியோ அமைப்புடனும், 11:30 மணிக்கு ஜாக்டோ ஜியோ அமைப்புடனும் பேச்சு நடைபெற உள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். உரிய ஊதியம் வழங்கப்படும் என கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய ஆளுங்கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தி.மு.க., வுக்கு ஆதரவை அளித்தன. இந்தநிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிய உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

2026 சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என்று தொடர் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர். கடந்த டிச., 22 ல் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து ஜன.,6 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் நாளை ஜன.,2ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களுடன் அமைச்சர் வேலு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காலை 11 மணிக்கு போட்டோ ஜியோ அமைப்புடனும், 11:30 மணிக்கு ஜாக்டோ ஜியோ அமைப்புடனும் பேச்சு நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களான போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்புகளுடன் அமைச்சர் எ.வ.வேலு நாளை (ஜன.2) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜன.6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி