பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு - டிட்டோஜேக் மாநில அமைப்பு அறிக்கை : 20.01.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2026

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு - டிட்டோஜேக் மாநில அமைப்பு அறிக்கை : 20.01.2026

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) மாநில அமைப்பு

: 20.01.2026


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் இன்று 20.01.2026 செவ்வாய் காலை சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சென்று சந்தித்து நமது கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பத்தை அளித்தோம்.

இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக டிட்டோஜேக் பேரமைப்பின் கோரிக்கையினை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டோம்.

இடைக்கால ஏற்பாடாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும், சிறப்பு தகுதித் தேர்வு அறிவிக்கப்படும் பொழுது ஆசிரியர்களுடைய பணித் தகுதி, உயர் கல்வித் தகுதி ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடம் தெளிவாக எடுத்துக் கூறினோம். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இது தொடர்பாக விரிவாகக் கேட்டு அறிந்து நிச்சயமாக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

அனைத்துக் கோரிக்கைகளையும் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தவாறு விரைந்து நிறைவேற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பரிந்துரை செய்து உதவிட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம். முழுமையாக நமது அறிக்கையினைப் படித்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

titto_jac Letter - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி