உத்தர பிரதேசத்தின் வாராணசியில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தமிழ் கற்கலாம் என்ற கருப்பொருளுடன் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஆதித்யநாத் பேசும்போது, “உத்தர பிரதேச பாடத்திட்டத்தில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சேர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 28-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒரு பகுதியாக வாராணசியின் குயீன் கல்லூரியைச் சேர்ந்த மாணவி பாயல் படேல் தமிழ் மொழியை கற்று வருகிறார். வாராணசியின் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தமிழ் கற்கலாம் என்ற சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது. பிஜி தீவு முதல் காசி வரை மக்களின் மனங்களை தமிழ் ஒன்றிணைக்கிறது” என்று தெரிவித்தார்.
உ.பி. அரசு வட்டாரங்கள் கூறும்போது, “பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத்தின் முயற்சியால் உ.பி. பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக வாரணாசி பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. மேலும் வாரணாசியை சேர்ந்த 50 ஆசிரியர்கள் தமிழகம் சென்று இந்தி பாட வகுப்புகளை நடத்த உள்ளனர்” என்று தெரிவித்தன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி