அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று முதல் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் மறியலில் ஈடுபடப் போவதாக, தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ஜன.3-ம் தேதி அறிவித்தது. இதில், சத்துணவு ஊழியர்கள் இடம் பெறவில்லை. இதற்கிடையில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜன.20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில், சத்துணவு ஊழியர் சங்கம் மற்றும் போராட்டம் அறிவிக்காத சங்கங்களை தலைமைச் செயலகத்தில் அழைத்து, சமூக நலத்துறை செயலாளர் ஜெய முரளிதரன், இயக்குநர் சங்கீதா, இணை இயக்குநர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் கால அவகாசம் கோரினர்.
இதை ஏற்க சத்துணவு ஊழியர் சங்கம் மறுத்துவிட்டது. பின்னர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜெசி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இன்று (20-ம் தேதி) முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கும். 23-ம் தேதி வரை 4 நாட்கள் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியலும், 24, 25 தேதிகளில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டமும் நடைபெறும்” என்றார்.
தமிழக சத்துணவு பணியாளர் நலச்சங்கத்தினர் கூறும்போது, “ஒரு சங்கம் மட்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். எங்களுக்கும், அவர்கள் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை. 15 சங்கங்களில் 14 சங்கங்கள் நாளை (இன்று) போராட்டத்தில் பங்கேற்கவில்லை” என்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி