புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு: தலைமை செயலக சங்கம் முற்றுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2026

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு: தலைமை செயலக சங்கம் முற்றுகை

 


  1. முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS), தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் வரவேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
  2. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
  3. 'டாப்ஸ்' (TAPS) திட்டத்தின் கீழ், ஊழியர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்படும் என்றும், ஓய்வு பெற்ற பின் கடைசி மாதம் பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
  4. ஜாக்டோ ஜியோ, போட்டா-ஜியோ உட்பட பல சங்கங்கள் இந்த அறிவிப்பை வரவேற்று, முதல்வரை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
  5. சில சங்கங்கள் மட்டுமே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஏற்கவில்லை.
  6. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் (ஜனவரி 5) பங்கேற்ற 30 உறுப்பினர்களும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  7. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
  8. இதையடுத்து, சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ரகுராம் மற்றும் பிற உறுப்பினர்கள், சென்னை தலைமைச் செயலகம் வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தை உணவு இடைவேளையின்போது முற்றுகையிட்டனர்.
  9. சங்கத் தலைவர் வெங்கடேசன் இல்லாததால், செயலர் ஹரிசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை உறுப்பினர்கள் சந்தித்தனர்.
  10. சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யும் திட்டத்தை சங்கம் எப்படி வரவேற்கலாம் என்று கேள்வி எழுப்பி, பழைய ஓய்வூதியத் திட்டமே ஒற்றைக் கோரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
  11. உடனடியாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
  12. சங்க நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பணிக்கு திரும்பினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி