கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2026

கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

 

திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா 13.8.2025 அன்று நடந்தது. அந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.அப்போது அவரிடம் இருந்து ஆராய்ச்சி மாணவி ஜீன் ஜோசப் என்பவர் பட்டத்தை பெற மறுத்து, துணைவேந்தரிடம் பெற்றுக் கொண்டார்.

சட்டப்படி, வேந்தர் தான் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆவார். வேந்தர் இல்லாத போது மட்டுமே துணைவேந்தர் மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியும். எனவே வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்டவிதி மீறல். மேலும் அந்த மாணவி பட்டமளிப்பு விழாவின் போது அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் கருத்துகளை தெரிவித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத கவர்னரிடம் நான் ஏன் பட்டம் பெற வேண்டும் என மாணவி கூறி இருக்கிறார்.

பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டத்திற்கான களம் அல்ல. மாணவி துணை வேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல. எனவே அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும் மாணவியிடம் இருந்து பட்டத்தை திரும்ப பெற வேண்டும். பல்கலைக்கழக விதிகளை மீறி மாணவிக்கு பட்டம் வழங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

3 comments:

  1. இப்படி ஒரு செயலை செய்தால் என்ன தண்டனை என சட்டத்தில் வழிமுறை இல்லையாம் அதனால் வழக்கு தள்ளுபடி
    அவ்வளவு முறையற்ற வகையில் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதா இல்லை இப்படியெல்லாம் முறையற்ற வகையில் எந்த students ம் செய்ய மாட்டார்கள் என எடுத்து கொள்ளப்பட்டதா

    ReplyDelete
  2. அவரவர் அறிவைப் கொண்டு படித்து,ஆய்வு செய்து பட்டம் பெறுவது அதுவும் ஆளுநரிடம் பெறுவது கவுரவம் அதை சம்பந்தப்பட்ட நபர் அவரிடமிருந்து பெறவிரும்பவில்லை விட்டுவிட வேண்டியதே சிறப்பு சில வலியும் வேதனையும் அவரவர்க்கே தெரியும்....

    ReplyDelete
  3. its only political publicity, she will get local body counselor or mayor seat soon

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி