பள்ளிக் கல்வித் துறை வளர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் இன்று (20.01.2026) கன்னிமாரா நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை வளர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்தரமோகன்.B இ.ஆ.ப., பொது நூலகத் துறை இயக்குநர் திருமதி ஜெயந்தி, இ.ஆ.ப., ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலதிட்ட இயக்குநர் மரு. மா.ஆர்த்தி, இ.ஆ.ப., மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் திரு. சுதன், இ.ஆ.ப., (வி. ஓய்வு), பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர்.பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி