1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
புத்தகங்கள் காலத்தின் விதை நெல் - பாரதிதாசன்
பொது அறிவு :
01.தென் இந்தியாவில் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்-Andhra pradesh
02.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
அமெரிக்கா-வாஷிங்டன் D.C
Washington, D.C., USA.
English words :
inhabitants-citizens
hit the sack - go to sleep
தமிழ் இலக்கணம்:
ஒரு சொல் முழுதாக முடியாமல் பாதியில் நிற்பது எச்சம் எனப்படும்
இது வினையெச்சம் பெயரெச்சம் என்று இருவகைப்படும்.
பெயரெச்சம் வினையெச்சம் என்று எவ்வாறு கண்டு பிடிப்பது என்று இன்று காண்போம்
எச்சத்திற்கு பின் வினைச் சொல் வந்தால் வினையெச்சம்.
எ. கா – எழுந்து இது ஒரு எச்சம்
இதன் பிறகு வந்தான், சென்றான், நடந்தான் போன்ற வார்த்தைகள் வரும். இவை அனைத்தும் வினைச் சொற்கள். எனவே இது வினையெச்சம்
சென்ற என்பது ஒரு எச்சம்.
இதன் பிறகு வண்டி, குதிரை, மாணவன் போன்ற சொற்கள் வரும். இவை அனைத்தும் பெயர் சொற்கள் எனவே இது பெயரெச்சம்
ஜனவரி 22
- 1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.
நீதிக்கதை
கற்றப் பாடம்
ஒரு நாள் காட்டில் உள்ள சிங்கம், நரி, கழுதை ஆகிய மூன்றும் சேர்ந்து வேட்டைக்குச் சென்றன. அன்று வேட்டையில் கிடைப்பதை சமமாகப் பிரித்துக் கொள்வது என்று மூன்றும் முடிவு செய்தன. வேட்டைக்கு செல்லும் வழியில் கொழுத்த கலைமான் ஒன்று அகப்பட்டது. அதனை சிங்கம் பங்கு போடச் சொல்லி கழுதைக்கு கட்டளை இட்டது. அக்கழுதையோ ஏற்கனவே மூவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கலைமானை மூன்று சமப்பங்காக கூறு போட்டது. சிங்கமோ, தனக்கு மரியாதைக் கொடுக்காமல் சமபங்கு போட்ட கழுதையின் மேல் கோபம் கொண்டு அதன் மீது பாய்ந்து கழுதையைக் கொன்றது.
பிறகு உடன் இருந்த நரியை பங்கு போடச் சொல்லியது சிங்கம். சிறிய பங்கை தனக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்தையும் சிங்கத்திற்கே கொடுத்தது. அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சிங்கம் இவ்வளவு பெருந்தன்மையையும், மரியாதையையும் எங்கே கற்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த நரி, இறந்து கிடக்கும் கழுதையைச் சுட்டிக்காட்டி, இதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன் என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது.
நீதி :
கெட்டவர்கள் நியாயத்திற்கு மதிப்பு அளிக்க மாட்டார்கள்.
இன்றைய செய்திகள்
22.01.2026
⭐254 மீன்பிடிப் படகுகளும் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாக சீர்குலைத்துள்ளது.
⭐ வட இந்திய மாநில ங்களிலிருந்து போதைப்பொருள்களை வாங்கி, விற்பனை செய்து வந்த வேலூர் காட்பாடியிலுள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 7 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
⭐ரஷ்யாவின் கம்சட்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. 2 மாடி கட்டிட உயரம் வரை பனிப்பொழிவு மூடியுள்ளது.அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிய பனிப்பொழிவை இடித்து சுரங்கம் தோண்டி மக்கள் வெளியேறி வருகின்றனர்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀 ஐ.பி.எல் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🏀இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
Today's Headlines
⭐ 254 fishing boats and 90 fishermen, including those who were arrested and are in Sri Lankan custody. Such incidents have deeply disrupted the social and economic structure of coastal areas.
⭐ Police have arrested 7 students studying at a private university in Vellore's Kadpadi for purchasing and selling drugs from North Indian states.
⭐ A severe snowstorm is blowing in Kamchatka, Russia. The snow has covered buildings up to 2 stories high. People are digging tunnels to come out by clearing the snow around the apartment building.
SPORTS NEWS
🏀 IPL is expected to start on March 26.
🏀 New Zealand won the 3-match ODI series between India and New Zealand cricket teams by a score of 2-1.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி