TNPSC : 10 போட்​டித் தேர்​வு​களுக்கான விடைத்​தாள்​கள் ஆன்​லைனில் பதிவேற்​றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2026

TNPSC : 10 போட்​டித் தேர்​வு​களுக்கான விடைத்​தாள்​கள் ஆன்​லைனில் பதிவேற்​றம்

 

உதவி ஜெயிலர் தேர்வு உட்பட 10 போட்​டித் தேர்​வு​களின் விடைத்​தாள்​களை டிஎன்பிஎஸ்சி ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்​துள்​ளது. அவற்றை தேர்​வர்​கள் உரிய கட்ட​ணம் செலுத்தி பிப்​.19-ம் தேதி வரை பதி​விறக்​கம் செய்​துக் கொள்​ளலாம்.


இது தொடர்​பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலுவலர் ஏ.சண்​முகசுந்​தரம் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: கடந்த 2023-ல் நடை​பெற்ற ஒருங்​கிணைந்த நூலக பணி தேர்​வு, உதவி ஜெயிலர் தேர்​வு, ஒருங்​கிணைந்த ஜியாலஜி சார்​நிலை பணி தேர்​வு, உதவி பயிற்சி அலு​வலர், உதவி பகுப்​பாய்​வாளர் தேர்​வு, கடந்த 2024-ல் நடந்த இந்​துசமய அறநிலைய ஆட்​சித் துறை செயல் அலு​வலர் (கிரேடு-1) தேர்​வு, உதவி வேளாண் அலு​வலர் மற்​றும் உதவி தோட்​டக்​கலை அலு​வலர் தேர்வு உட்பட 10 போட்​டித் தேர்​வு​களுக்​கான விடைத்​தாள்​கள் தேர்​வாணை​யத்​தின் இணைய தளத்​தில் (www.tnpsc.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

இத்​தேர்​வு​களை எழு​திய தேர்​வர்​கள் உரிய கட்​ட​ணம் செலுத்தி தங்​களின் ஒரு​முறை பதிவு (ஓடிஆர்) வாயி​லாக பிப். 19-ம் தேதி வரை ஆன்​லைனில் பதி​விறக்​கம் செய்​துக் கொள்​ளலாம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி