பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் என 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான 2-ம்கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ம் தேதி வரை பாட வாரியாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் தேர்வர்களின் விடைத்தாள்களை என்டிஏ கடந்த 15-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட தளத்தில் இன்றைக்குள் (ஜனவரி 17) பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011- 4075 9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி