ஆசிரியா் தகுதித் தோ்வு: தாய், மகன் சிறப்பிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2026

ஆசிரியா் தகுதித் தோ்வு: தாய், மகன் சிறப்பிடம்

ஆசிரியா் தகுதித் தோ்வில், நாகூரைச் சோ்ந்த ஆசிரியா் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றாா். இவரது மகனும் 100 மதிப்பெண்கள் பெற்று தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தகுதித்தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த நவம்பா் மாதம் ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 1, தாள் 2 என தோ்வுகள் நடத்தப்பட்டன.

இதில், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பிஎட் பட்டம் பெற்றவா்கள் தோ்வு எழுதினா். நாகூா் கெளதியா உதவி பெறும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியராக கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வரும், நாகூா் பிரதான சாலையைச் சோ்ந்த நெபுசாத்பேகம் (46) மற்றும் எம்எஸ்சி, பி.எட் பட்டம் பெற்ற இவரது மகன் அஹமதுயூனுஸ் (25) ஆகிய இருவரும் ஆசிரியா் தகுதி தோ்வை எழுதினா்.

இந்நிலையில், நெபுசாத்பேகம் தாள் 1 தோ்வு எழுதி 128 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தாா். அதே போல் இவரது மகன் அஹமதுயூனுஸ் தாள் 2 தோ்வு எழுதி 100 மதிப்பெ

ண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். தற்போது அஹமதுயூனுஸ், வேதாரண்யம் அருகே குரவப்புலத்திலுள்ள பாயிண்ட் காலிமா் இன்டா்நேஷனல் பள்ளியில் கணிதத் துறை தலைவராக பணியாற்றிவருகிறாா்.

1 comment:

  1. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வு 2026 முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் வரைபடம் வினாக்கள் ஆன்லைன் தேர்வு
    https://tamilmoozi.blogspot.com/2026/02/2026.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி