மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் பணியில் சேருவதற்கு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2 தாள்கள் கொண்ட இந்தத்தேர்வை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் ஆண்டுதோறும் ஜூலை,டிசம்பர் என 2 முறை தேர்வு நடத்தி வருகிறது.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றால், அதன்சான்றிதழ் வாழ்நாள் முழுவதும்செல்லத்தக்கதாகும்.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான சிடெட் தேர்வு இன்றும், நாளையும் (பிப்.7, 8) நடைபெறுகிறது. மொத்தம் 150 மதிப்பெண்கள். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 20 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் விவரங்களை https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். தேர்வு மையத்துக்கு காலை அமர்வுக்கு 9.30 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் முன்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும்.
ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிகளை முறையாக பின்பற்றி தேர்வறையில் செயல்பட வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டால், தேர்ச்சி ரத்து செய்யப்படுவதுடன், எதிர்காலத் தேர்வுகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி