திருக்குறள்
Effort is the key to success.
முயற்சியே வெற்றியின் சாவி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பணத்தை விட அறிவே உயர்ந்தது
2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.
பொன்மொழி :
பிறரிடம் உள்ள நல்ல விஷசயங்களை கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம்.
- விவேகானந்தர்.
பொது அறிவு :
01. எந்த நாட்டின் பாராளுமன்றம் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது?
நார்வே பாராளுமன்றம்
The Norwegian Parliament
02.பலூனில் முதல்முறையாக உலகைச் சுற்றிப் பறந்த முதல் அமெரிக்கர் யார்?
ஸ்டீவ் ஃபோசெட் -Steve Fossett
English words :
haunting-sad and unforgettable
piblings-aunt and uncle
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
இந்த பாலைவனம் நீண்ட காலமாக 'இருண்ட மண்டலம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நிகழ்விற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்க ஆய்வுக்குப் பிறகு, மெக்சிகோ அரசு சிஹுவாஹுவா பாலைவனத்தில் ஒரு பெரிய ஆய்வகத்தை நிறுவியது. இது 'தி ஜோன்' என அறியப்படுகிறது.
பிப்ரவரி 05
நீதிக்கதை
ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.
கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.
நீதி: நாம் பிறருக்கு துன்பம் விளைவிக்கும்போது நமக்கும் இன்னல் வரும்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி