தவறான ஊதிய நிர்ணயம் , ஊதிய நிலுவை பிடித்தல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு - SLP (C) No 11540/2024 , தீர்ப்பு நாள் : 30.01.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2026

தவறான ஊதிய நிர்ணயம் , ஊதிய நிலுவை பிடித்தல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு - SLP (C) No 11540/2024 , தீர்ப்பு நாள் : 30.01.2026

 

தவறான ஊதிய நிர்ணயம், ஊதிய நிலுவை பிடித்தல் recovery , உச்ச நீதிமன்ற தீர்ப்பு 

* உச்ச நீதிமன்றம் SLP (C) 11540/2024

* ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்தின் படி தவறுதலாக தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை எதிர்மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மதுரை உயர் நீதிமன்றம் தர ஊதியம் தவறுதலாத ஆசிரியருக்கு / அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டு இருந்தால் மக்களின் வரிப்பணம் என்ற கருத்தை கூறி ,தவணை முறையில் தவறுதலாக கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடிக்க தீர்ப்பு அளித்தது .

* மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பில் /In view of facts and circumstances, this Court do not find any 

irregularity or infirmity in respect of correcting the erroneous scale of pay 

and the consequential recovery.  The respondents are directed to recover the 

amount by way of instalments./ என்று கூறப்பட்டது

* மேல் முறையீட்டில் இரண்டு நீதிபதி அமர்வு 50% அரசு ஊழியரும் , 50% ஊதிய நிர்ணய அதிகாரியும் திரும்ப செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அரசு ஊழியர் / ஆசிரியர்கள் கூடுதலாக வழங்கப்பட்ட தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்த போதும் , நீதிமன்றம் ஏற்கவில்லை.

* மதுரை உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு தீர்ப்பில் /Therefore, this Court is of the considered opinion that 50% of the 

amount shall be recovered from the 

appellant and remaining 50% shall be 

recovered from the erring officials./


* மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

* SLP ( C ) 11540 / 2024 ல் 50% ஆசிரியர் , 50% அதிகாரி திரும்ப செலுத்த வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

* நிலுவை தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற CA No 11527/2014 Rafiq masih தீர்ப்பு மிக விரிவான வழிகாட்டுதலை வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்பின் படி ஊதிய நிர்ணயம் 5 ஆண்டுகளை கடந்து இருந்தால் திரும்ப செலுத்த வேண்டியதில்லை .C ., D பிரிவு ஊழியர் திரும்ப செலுத்த வேண்டியதில்லை . ஓய்வு பெற ஓராண்டு இருக்கும் போது தணிக்கை சட்டத்திற்கு எதிரானது. இந்த தீர்ப்பை மத்திய அரசு மாநில அரசுகள் செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி