தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் 8.9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இந்நிலையில், தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் மட்டும் சில கேள்விகள் கடினமாக இருந்தன. மற்ற அனைத்து பகுதிகளில் இருந்தும் எதிர்பார்த்த வினாக்களே கேட்கப்பட்டன.
ஆங்கிலப் பாடத்தேர்வு மார்ச் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்.6-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்படும். அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு சென்னை ராயபுரத்தில் உள்ள தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
படுத்தபடி தேர்வெழுதிய மாணவர்: சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் சாய் கார்த்திக், தனது வீட்டு மாடியில் இருந்து இறங்கும்போது படிக்கட்டிலி ருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் உட்காரவோ, நடக்கவோ இயலாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
எனவே, பொதுத் தேர்வை ஆம்புலன்ஸில் சென்று தேர்வு எழுதுவதற்கு கல்வித் துறையில் மாணவர் சாய் கார்த்திக் அனுமதி கேட்டிருந்தார். தொடர்ந்து அந்த மாணவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், மாணவருக்கு உதவுவதற்காக (ஸ்கிரைப்) வேறொரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார். ஆம்புலன்ஸ் மூலமாக தேர்வு மையத்துக்கு வந்த மாணவர் சாய் கார்த்திக், ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மாணவர் கூற, அதை விடைத்தாளில் ஆசிரியர் எழுதி னார்

10 th social science public exam 2026 important questions
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2026/03/10th-social-science-important-questions.html