அரைப் பவுன் நகை, பணம் தருமாறு லஞ்சம் கேட்கும் வட்டார கல்வி அலுவலர் !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2026

அரைப் பவுன் நகை, பணம் தருமாறு லஞ்சம் கேட்கும் வட்டார கல்வி அலுவலர் !!


பள்ளிகளில் ஆண்டாய்வு செய்ய அரைப் பவுன் நகை, பணம் தருமாறு வட்டார கல்வி அலுவலர் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


🎤இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் சேகர், பொருளாளர் உமா மற்றும் சங்க நிர்வாகிகள் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

🗞️அதில் கூறியிருப்பதாவது:

🍭வேலூர் மாவட்டத்தில் 
காட்பாடி
குடியாத்தம்
கே.வி.குப்பம்
அணைக்கட்டு
கணியம்பாடி
பேரணாம்பட்டு
வேலூர் புறநகர் மற்றும் 
வேலூர் மாநகரம் என 8 வட்டார கல்வி அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன.

 🔥இதில் குடியாத்தம் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர், ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்கி வருகிறார். 

❌அரசு பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்ய ₹10 ஆயிரம்

பள்ளியைப் பார்வையிட ₹2 ஆயிரம், 

அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆண்டாய்வுக்கு ஆசிரியர்களிடம் தலா ₹5 ஆயிரம்

தேர்வு நிலை, சிறப்பு நிலை உத்தரவுகளை வழங்க அரைப் பவுன் மோதிரம் அல்லது 

₹20 ஆயிரம் வழங்கவேண்டும் என கேட்டு நிர்பந்திக்கிறார். 

🔥மேலும் பெண் ஆசிரியர்களிடம் பணம் வசூலிப்பதற்காக முறையற்ற வகையில் நடந்துகொள்வதும், மிரட்டுவது மற்றும் ஒருமையில் பேசுவதுமாக உள்ளார். 


⏩கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி குடியாத்தம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடந்த தலைமை ஆசிரியர் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். எனவே அவரிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

4 comments:

  1. ஆரம்ப பள்ளி கூட்டணி நிர்வாகிகளே உங்களைப்போல் தான் அவர்களும் , நீங்கள் வெளியே தெரியாமல் பெட்டியாக லட்சக்கணக்கான பணம் பெறுகிறீர்கள் அவர்கள் ஆயிரக்கணக்கில் பெறுகிறார்கள்,மானம் கெட்ட மனிதர்களே,ஒரே குட்டையில் ஊறிய மானம் கெட்ட அழுகிய மட்டை நாய்கள் தூ

    ட்டை நாய்கள் தூ




    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பெரிய அறிங

      Delete
  2. ஆசிரியர்களை கடைசி நேரம் மாத கணக்கில் வீதியில் போராட வைத்து ஏமாற்றிய மனிதர்கள் நீங்கள் அடுத்தவர்களை பேச உங்களுக்கு அருகதை இல்லை,அது சில்லரை எச்ச இலை
    நீங்கள் ரூபாய் எச்ச இலை

    ReplyDelete
  3. நீங்களும் உங்கள் சங்கமும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி