ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு அழைப்பு - தமிழக அரசு பயிற்சி மையத்தில் ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2026

ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு அழைப்பு - தமிழக அரசு பயிற்சி மையத்தில் ஏற்பாடு

 ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு அரசு பயிற்சி மையத்தில் வரும் 17-ம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பயிற்சித் துறை தலைவர் எஸ்.கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இம்மையத்தின் சார்பில், இந்திய வனப்பணி (ஐஎஃப்எஸ்) முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு வரும் 17-ம் தேதி அன்று மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் 13-ம் தேதி (இன்று) முதல் 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப விவரங்களை (DAF) பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 93457 66957 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி